பக்கம் எண் :

50அழகர் கிள்ளைவிடு தூது


 

மால்கொண்ட தலைவி கூற்று

 

 

 


170

 

 

 

 

 

175

 

 

 

 


180

 

பின்னழகு முன்னழகாம் பேரழகைக் காணுமுன்னே
முன்னழகைக் கண்டேனான் மோகித்தேன்-பின்னழகு
தானேகண் டாலுந் தனக்குத் துயர்வருமென்
றேனோரை நோக்கி யெழுந்தருள-ஆனோன்
விமலத் திருமுகமு மென்மார்பின் மேவும்
கமலத் திருமுகமுங் கண்டேன்-அமலன்
அரவணையா னென்பதுமுண் டண்ணல்அரன் போல
இரவணையா னென்பதுமுண் டேனும்-பரவைத்
திருவணையா னென்றுதினஞ் செப்புவது பொய்யென்
உருவணையு மாதர்க் குரைத்தேன்-மருவணையும்
செங்கரத்தில் அன்று திருடியவெண் ணெய்போலச்
சங்கிருக்க என்சங்கு தான்கொண்டீர்-கொங்கை
மலையருவி நீருமக்கு மாலிருஞ் சோலைத்
தலையருவி நீர்தானே சாற்றீர்-விலையிலாப்
பொற்கலை ஒன்றிருந்தாற் போதாதோ அன்றுபுனை
வற்கலையி லேவெறுப்பு வந்ததோ-நற்கலைதான்
ஆரஞ்சேர் கொங்கைக் களித்த தறியீரோ
சோரந் திரும்பத் தொடுத்தீரோ-ஈரஞ்சேர்
நூலாடை யாமெங்கள் நுண்ணாடை தாமுமக்குப்
பாலாடை யாமோ பகருவீர்-மாலாகி
மொய்த்திரையும் எங்கள் மொழிகேளீர் பாற்கடலில்
நித்திரைதான் வேகவதி நீரிலுண்டோ-இத்தரையிற்
பொங்குநிலா வெள்ளம் பொருந்திற்றோ பாற்கடல்தான்
அங்குநிலா தும்மோ டணைந்ததோ-கங்குலெனும்
ஆனை கெசேந்திரன் ஆகிலதன் மேல்வருவன்
மீனையும் விட்டு விடலாமோ-கானச்
சதிரிள மாதர் தமக்கிரங்கு வீர்நெஞ்
சதிரிளமா தர்க்கிரங்கொ ணாதோ-முதிர்கன்றைக்
கொட்டத்து வெண்பால் குனிந்துகறப் பார்முலையில்