பக்கம் எண் :

66அழகர் கிள்ளைவிடு தூது


தீர்க்கின்றாய். மேலினத்தைச் சார்ந்தவர் நட்பிற் சிறந்தவர் எனினும் பூசையை
விட்டார்கள் எனின் அவர் முகத்தில் நீ விழிக்கமாட்டாய். (இவைகள் உன்
பெருமையைக் காட்டுஞ் செயல்கள்)

   (வி - ம்.) இளம்பிள்ளையைப் பச்சைப்பிள்ளை என்பது உலக வழக்கு. நரை திரை
மூப்புப் பிணி சாக்காடு இன்றிப் பல்லாண்டு இளமையாக வாழ விரும்பியவர்கள்
அதற்குரிய காயகற்பம், யோகப்பயிற்சி செய்து எஞ்ஞான்றும் இளமையாக இருப்பார்கள்.
நீயோ ஒன்றும் செய்யாமலே இளம்பிள்ளையாய் இருக்கின்றாய் என்று வியப்பாகக்
கூறியது இது.

மாறிணைப்போல என்பதற்கு, மால் மகிதலத்தோர் வாட்டம் அறப் பாலனத்தாலே
பசிதீர்ப்பார் - மால் பூமியில் உள்ளோர் வாட்டம் நீங்கும்படி காத்தல் எனும்
தொழிலாலே பசியை நீக்குவார் என்றும், பால் அனத்தாலே பசிதீர்ப்பாய் - பாலும்
சோறும் ஆகிய உணவினால் உன் பசியை நீக்குவாய் நீ என்றும் சொல் ஒப்புக் காண்க.

பூசை என்பது பூனைக்குப் பெயர். கடவுட் பூசனையையும் உணர்த்தும் இது.
மேற்குலத்தாராயினும் நட்பினராயினும் நின்மேற் பூனையை ஏவிவிட்டார் என்றால்
அவர்கள் முகத்தில் விழிக்காமல் அவர்களை வெறுப்பாய். அவர்களே உனக்குப்
பகைவர் என்பது. நடந்துவரும் பூசனையை மறந்துவிட்டவர் யாராயினும் அவர்கள்
முகத்தில் நீ விழிக்கமாட்டாய். இஃது உன் மேலாய பண்பு என மற்றும் ஒரு
வெளிப்பொருள் தோன்றுதல் காண்க.

20-25: வெட்டும் இரு வாளனைய...........சிவப்புண்டானதோ

   (சொ - ள்.) வெட்டுதற்குரிய இரண்டு வாளாயுதம் போன்ற கண்களையுடைய
பெண்கள் வளர்க்க வளர்கின்றாய் நீ, வில்லையுடைய வேடனை வரக்கண்டாற் பறந்து
ஓடிவிடு வாய், இன்னும் கேட்பாயாக, சிவப்பும் பச்சையும் ஆகிய இரண்டு வடிவமும்
கொண்டமையால் எங்கட்குத் தெய்வமாகிய பெரிய திருவடிகள் பெருமையையெல்லாம்
நீ பெற்றிருக்கின்றாய். குருவாகித் தியானஞ் செய்யும் குருமார்களுக்கெல்லாம்
திருவரங்கர் பெயரை மந்திரமாக எப்போதும் கூறுகின்றாய். யானைக்கொம்புபோன்ற
கொங்கையுடைய மங்கையர் மனமகிழ்ச்சி யடைய அவர்கள் சிவந்த உதட்டில்