பக்கம் எண் :

விளக்க உரை91


தின்பதற்குச் சி்ங்க முழங்குவதால், அம்முழக்கத்தை வீரமுரசாகவும், யானை
தன்னினத்தை யழைப்பதற்காகப் பிளிறுவதால் அதனை நியாயமுரசாகவும், மேகம் மழை
பெய்வதற்கு முழங்குவதால் அதனைக் கொடைமுரசாகவும் மூன்று வகையாகக் கொள்க.
 
ஆணை

122, 123 : என்றும் அவன் .............ஆணை தரித்தோன்

   (சொ - ள்.) எக்காலத்திலும் "அவன் அசையாமல் ஓர் அணுவும்கூட அசையாது"
என்ற பழமொழிப்படி தவத்தால் நிலைபெற்ற ஆணையையுடையோன்.

   (வி - ம்.)அணுவும் அவன் "அசையவேண்டும்" என்று கருதினால்தான் அசையும்;
மலையும் அவ்வாறுதான். எல்லாப் பொருள்களும் இறைவன் ஆணையின்றி இயங்கா.
திருவுள்ளம் கருதியபடி எல்லாப்பொருள்களும் இயங்கும். தமக்கென்று செயலுடையன
அல்ல என்னும் கருத்துத் தோன்ற, "அவன் அசையாமல் அணு அசையாது" என்று
சொல்லுகின்ற ஆணையையுடையவன் என்றார்.

123-127 : நவநீதம் மேனியிற் .............மெய்யான்

   (சொ - ள்.) உடம்பின் மேல் தெறித்த வெண்ணெயும்    மெல்லிய தன் கையில்
எடுத்த வெண்ணெயும் வானத்தில் தோன்றும் விண்மீன்களும் வெண்ணிலாவும்போலத்
தோன்றும்படி உறியில் இருந்த வெண்ணெயை எடுத்து உண்டவன் ; சிவந்த சூரியனும்
வெள்ளிய சந்திரனும் என்ன இரண்டு விழிகளும், சங்குசக்கரமும் தாங்கியவன் ;
அழகிய இடம் பரந்த உலகத்தையெல்லாம் உண்ட கோவைக்கனி போன்ற சிவந்த
வாயையுடையவன்; அவ்வுலகங்கள் தங்கியிருக்கும் திருவயிற்றையுடையவன்; தான்
முதலில் உண்ட படியே அவ்வுலகங்களையெல்லாம் ஈன்ற திருவுந்தியையுடையவன்;
நெருங்கி அவ்வுலகங்களை அளந்த திருப்பாதங்களையுடையவன்; முற்காலத்தில்
மாவலிபாற் சென்று "மூன்றடி மண்வேண்டும்" என்று வேண்டி ஏற்றுக்கொண்ட
கையையுடையவன் ; அப்பூமியில் விளைந்த பச்சைப் பயிர்களின் வடிவம்போன்ற பசிய
நிறமுடைய திருமேனியுள்ளவன்.