பக்கம் எண் :

விளக்கவுரை66


அடைந்தவர்க்கே கூடும். உன்னைக் கூடாது வாழும் அடியார்க்குத் தென்பால்
உள்ள எமனுலகமே கிடைக்கும். குளிர்ந்த தமிழ் மொழியே! இவ்வுலகின் உன்
(தமிழ்ச்) சங்கத்தால் சிவபெருமான் உயர்வு பெற்றாரோ? உயர்ந்த
அப்பெருமானால் நீ யுயர்ந்தனையோ? தாமரைப் பூவை வீடாகக்
கொண்டுறையும் கலைமகள் அகங்கையின் மேலே நீ யிருந்தனையோ?
உன்னை ஏட்டுவடிவமாக்கி யதன்மேற் கலைமகள் இருந்தனளோ? ஆடும்
பாம்பாகிய தாழ்ந்த பாயலுடைய திருமாலை நீதானே பின்றொடர்ந்து
சென்றனையோ? அத்திருமால்தான் சுருட்டிய பாயுடன் உன்னைப்
பின்றொடர்ந்தனரோ? அகத்தியமுனிவர் முருகக் கடவுளை நோக்கி “என்
வாழ்வே தமிழ் மொழியினைக் கற்பிக்க வேண்டும்” என்று கேட்க வுனை
முருகக்கடவுள் அம்முனிவர்க்குக் கற்பித்தனரோ? ஒளியே! அம்முனிவரைக்
கற்குமாறு நீ தான் உரைத்தனையோ? வேறுபடாத என் அன்பர் சிவபெருமான்
உனக்குப் பொருளாக முன் நின்றாரோ? நீண்ட மதுரையில் வீற்றிருக்கும்
அப்பெருமானுக்குப் பொருளாக நீதான் வந்தனையோ? இவை என்
மனத்தெழுந்த ஐயங்கள்; இவற்றை நீக்குமாறு அறியேன். மயக்கமுற்ற என்
செயலினை யாய்ந்து கண்டு மனமிரங்கி உதவிபுரிவதே நீதியாகும். உன்
செய்திகள் எல்லாவற்றையும் நானோ சொல்லத் தகுதியுடையேன்; இனிய
சொற்களையுடைய தமிழே.

     (வி - ம்.) உனைக்கொண்டு புகழ்கொண்டவர் என்றது
தமிழ்ப்பாடல்களை யேற்றுப் புலவர்க்குப் பொருள் வழங்கிப் புகழ் பெற்ற
வள்ளல்களை யுணர்த்தியது; அவர்களே புகழ்வடிவமாக மண்ணில்
வாழ்பவரும் விண்ணில் தெய்வவடிவமாக மேவி வாழ்வோருமாவர் ஆதலின்.
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவ னேவா வான வூர்தி, எய்துப
என்ப” (புறநா - 27) அக்கருத்து ஈண்டு அமைந்திருப்பதறிக. தொண்டருக்கு
என்பது, உனைக்கூடாத என்ற குறிப்பினால் ஆசைக்கு அடிமைப்பட்டவர்கட்கு
எனப் பொருள் தந்தது. மண்ணாசை முதலிய ஆசைக்கு அடிமையா யுழன்று
பலவகைத் தீவினை புரிந்து பாவியர் ஆவார் எனவும், அவர் எமனுலகத்திற்கே
யேகுவர்