எனக் கூட்டுக. காண்டம்
- கழுத்து. சரம் - மாலை. கண்டத்தில்
அணியப்பட்டு அதனளவிற் கிடப்பன கண்டசரம் எனக் கொள்க.
அலங்காரமே என்பது தமிழை விளித்ததாம். அன்றியும் எல்லாம்
அலங்காரமேயாம் எனக் கொள்ளலும் ஆம். புலம் - அறிவு. அறிவுதரும்
பொருளையும் பொன் என்ற பொருளையும் ஒன்றெனக் கருதலாமோ என்ற
கருத்தமைய உன்னைப் பொருளென்றுரைக்குந் தொறும் என்றார்.
உரைக்குந்தொறும் - பேசும் பொழுதெல்லாம் எனவும், கல்லில் தேய்த்துப்
பார்க்கும் பொழுதெல்லாம் எனவும் இருபொருள் தந்தது. நீ வளர்வாய்
என்றது அப்பொன் தேயும் என்ற குறிப்புக் காட்டியது. உரைக்கவுரைக்கப்
பெருகும் கல்வியாகிய உன்னையும், உரைக்க உரைக்கத் தேயும் பொன்னாகிய
பொருளையும் பொருள் எனப் பெயர் கூறுவது சிறிதும் பொருத்தமற்றது என்ற
கருத்துத் தோன்றப் பொருளென்னப் போதுமோ என்றார். கள்வராலும்
மன்னராலும் கவரப்படுங் கைப்பொருள் அழிந்துபோம் இயல்புடையது,
கல்விப்பொருளைப் போல என்றுந் துணையாயிருந் துதவிபுரிவதன்று என்று
செல்வப் பொருளை இழிவு கூறியது இது. கேடில் விழுச்செல்வம் கல்வி
யொருவர்க்கு, மாடல்ல மற்றையவை (குறள் 400). வைப்புழிக் கோட்படா
வாய்த்தீயிற் கேடில்லை, மிக்க சிறப்பினரசர் செறின் வல்வார், எச்ச
மெனவொருவர் மக்கட்குச் செய்வன, விச்சைமற் றல்ல பிற (நாலடி 134).
அறம் பொருளின்பம் வீடும் பயக்கும், புறங்கடை நல்லிசையும் நாட்டு -
முறுங்கவலொன் றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியிணுங்கில்லை, சிற்றுயிர்க்
குற்ற துணை (நீதிநெறி விளக்கம் 2). இவற்றின் கருத்துக்களை யொப்பிட்டுக்
காண்க.
88 - 96 : நன்னெறியின்..............இன்சொல்லாய்
(பொ - ரை.)
மண்ணுலகத்தில் நல்லொழுக்கமுடன் புகழ் வடிவமாய்
வாழ்வதற்கும், அவ்வாறு வாழ்பவர் பின் விண்ணுலகம் சென்று தெய்வ
வடிவமாகப் பொருந்தி யின்பந் துய்த்து வாழ்வதற்கும் ஆராய்ந்து உன்னைத்
துணையாகக் கொண்டு புகழ்
|
|
|
|