பக்கம் எண் :

விளக்கவுரை64


195) “மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத்தளைவிட்ட
பார்த்திபனும்” (விக்கி: உலா). “பொறையனைப் பொய்கைக்குப் பண்டு,
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்” (குலோத் - உலா). நல்லவன்
பொய்கை களவழி நாற்பதுக்கு; வில்லவன் காற்றளையை விட்ட கோன்
(இராச. உலா) என வருவன இவ்வரலாற்றிற்குச் சான்றாம். ஏழ் தளையை
யாப்பிலக்கணத்திற் காண்க. செந்தமிழ் - திருத்தமான தமிழ். வெண்பா -
வெள்ளையறிவுடைய பாட்டு என்பது மற்றொரு பொருள். மெய்யன்று; அஃது
பாட்டின் பெயர்; நீ வெள்ளறிவுடையவனல்லை; திருத்தமான அறிவுள்ளாய்
என்று கருத்துப் பொருத்துக. பண்பும் ஏரும் ஒலியும் உடைய பாவே! என்று
தமிழை விளித்ததாம். கிரேதா, திரேதா, துவாபர என்ற மூன்று யுகங்களினும்
இருந்தாய் என்றது தமிழின் பழமையைக் குறித்ததாம். கலிப்பா என்றது
கலியுகத்திற்குரிய பாடல் எனக் கூறுவது வழக்கன்று. தெருள் - தெளிவு.
தெளிவு தரும்பா என்க. ஒரு பத்துப் பொருத்தம் என மாற்றி, தெருட்பா
என்பதைத் தெளிவுடைய பாவாலமைந்த நூலின் முதற்சீரின்கண் எனச்
சொல்வருவித்துக் கொள்க. “ங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உண்டி,
வருணம், நாள், கதி, கணம் இவையே பத்துப் பொருத்தமாம். இவற்றின்
பொருத்தவிலக்கணங்களைப் பாட்டியலிற் காண்க. விருத்தம்
பாவினத்திலொன்று; வேறுபாடு என்ற பொருளையும் தரும். பொருத்தமுடைய
வுன்னை வேறுபாடுடையாய் எனக் கூறுதல் தகாது. வெண்பா, கலிப்பா,
மருட்பா, விருத்தம் என்பன பாட்டின் பெயர்களேயாம்; வேறு பொருடந்து
நிற்பனவல்ல அவைகள் என்ற கருத்து விளங்குவது காண்க. முச்சுடர் -
சூரியன், சந்திரன் தீ என்பவை. முச்சுடர் முந்தி (வந்து) ஒளியால்
இருட்குவையை விலக்கும் என மாற்றிப் பொருள் கொள்க. மனத்து இருள் -
அறியாமை, அஞ்ஞானம். உன் பேர் அணியும் பெருமை என்றது
சீவகசிந்தாமணி என்ற நூலின் பெயரை அம்மணி கொண்டிருப்பதனை.
சிந்தாமணி என்ற பெயரே கொடைத் தன்மையுடைமைக்குக் காரணம் என்பது
கருத்து. தணியும் - தாழ்ந்து கிடக்கும்; சரிந்து கிடக்கும். ஆரம்