சுடர்களும் முந்திவந்து
இருட் கூட்டத்தை ஒளியால் விலக்கும் என்று
சொல்வார் உலகினர்; அச்சுடர்கள் உன்னைப்போல வந்து என் மனத்துள்ள
அஞ்ஞானவிருளை மாற்றுமோ? சிந்தாமணி வண்மையிலுயர்ந்தது என்பார்;
அம்மணியின் கொடையும் வந்ததுவே. தாழ்ந்து சரியும் ஒளிவிளங்கும் பொன்
முத்து முதலியவற்றாற் செய்த மாலைகளும், கழுத்திற் பூண்டவணிகளும்,
தோள்வளைகளும் ஆகிய எல்லா வகையலங்காரமும் அலங்காரம் என்னும்
நூலாகிய வுன்னைப்போல் ஆகுமோ? அறிவைத்தரும் உன்னைப்
பொருளென்றுரைக்கும் பொழுதெல்லாம் பெருகுவாய்; பொன்னைப்
பொருளென்றுரைப்பது பொருத்தமோ? கன்னம் இட்டுக் கள்வரால் எடுக்கவும்,
மன்னராற்றண்டமாகக் கவரவும் வளரும் பொருள்களே மக்கள் கையிலுள்ள
பொருள்கள் எனலாம். என்ன பொருள்கள் அவை. உனைப்போல்
உறுதுணையாக வந்துதவா அவைகள்.
(வி - ம்.)
சேரமான் தன் அடிக்கு அண்டுதளை எனப் பிரித்துக்
கொள்க. அண்டு - பொருந்திய; அடுத்த. தளை - கால்விலங்கு
கைவிலங்குகள்.
சேரமான் - கணைக்காலிரும் பொறை யென்ற சேரமன்னன்
சோழன்
செங்கணான், கணைக்காலிரும் பொறையை வென்று விலங்கிட்டுச்
சிறைப்படுத்திய போது அச்சேரமானுடைய நண்பர் ஆய பொய்கையார் என்ற
புலவர், சோழன் செங்கணான் மேற் களவழி நாற்பது என்ற நூல் பாடி,
அதன் பயனாகக் கணைக்காலிரும் பொறையைச் சிறை மீட்டினர் என்ற
வரலாற்றினையுட் கொண்டு தளை விடுத்தாய் என்றார். களவழி நாற்பது
என்னும் தமிழ், அம்மன்னன் காற்றளையை நீக்கியது என்பது கருத்து.
புத்தியோ என்பதிலுள்ள ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது. பின்வரும்
ஓகாரங்களும் அப்பொருளனவே. ஏழ்தளை நின்னுறுப்புக்களே! பிறரிட்ட
தளையன்று; அவ்வியல்புடைய தளையாகக் கூறல் அறியாமையாம்; இதன்
பொருள் வேறு எனக் கொள்க. களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய
வுதியன் கால்வழித்தளையை வெட்டியரசிட்டவவனும் (கலிங்கத்துப்
|
|
|
|