வரி ஆக விதிப்பவை.
ஒன்னார்த் தெறுபொருள் - பகைவரை வென்று
கொண்ட பொருள் என வகை காண்க. பொருள்கோள் வகை - கவியிற்
பொருள் கொள்ளும் வகை. இஃது எட்டுவகை. இத்தொகை நன்னூல்
விதித்தபடி. ாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண், டாப்பிசை யளைமறி
பாப்புக் கொண்டுகூட்டடிமறி மாற்றினெப் பொருள்கோ ளெட்டே என்பது
நூற்பா. உரையில் இவற்றின் விளக்கம் காண்க. முப்பால்: அறம், பொருள்,
இன்பம், ஐம்பால்: ஆண், பெண், பலர், ஒன்று, பல என வகுத்தவை. சீர்
முப்பது: ஓரசைச்சீர் இரண்டு, ஈரசைச் சீர் நான்கு, மூவகைச் சீர் எட்டு;
நாலசைச்சீர் பதினாறு என வகுத்தவையாம். முப்பாலும் ஐம்பாலும்
சீர்முப்பதும் படைத்த செல்வரெவரும் இலர், நீயே என்பது கருத்து. பால்
என்பது செல்வர் பாலும் உண்டு; முப்பாலே அவர்பாலுள்ளன; ஐம்பால்
உள்ளனவாக அறிந்திலம் எனக் குறிப்புக் கொள்க. பசு, எருமை, ஆடு
இவற்றின் பால் அவர் பால் உள்ளன. ஒருவர் பால் தம் குறை கூறுவோர்
அவரை முதலிற் புகழ்ந்து கூறித் தம் குறையைப் பின்னர்க் கூறுவது
முறையாதலின் அம்முறையையொட்டிப் புகழ்வதாக அறிக. எல்லாம் காதல்
கொண்ட தலைவியின் கூற்றே.
78 - 88 : சேரமான்..........எய்தாவே
(பொ - ரை.)
சேரமான் கணைக்காலிரும்பொறைக்குப் பொருந்திய
காற்றளையை விடுவித்தாய் நீ, அத்தகைய உன் பொன்னடிக்கு ஏழ்தளைகள்
உண்டெனப் புகல்வது என்ன அறிவின்பாற்படுமோ? என்னரசனே! வலிய
பாவலர்க்கு அறிவாகிய செந்தமிழாய் நிற்கும் உன்னை வெண்பா என்று
சொல்வது உண்மையாமோ? பண்பும் அழகு உடைய ஓசையமைந்த பாடலே!
சங்கத்தில் மூன்று யுகங்களும் இருந்தாய், உன்னைக் கலிப்பா வென்றுரைப்பது
முறையோ? கெடாத இருள் போன்ற பரவிய மயக்கத்தை மாற்றி மக்களை
நல்வழிப்படுத்தும் உன்னை மருட்பா என்று கூறுவது நல்ல வழக்காகுமோ?
தெளிந்த பாடலின் முன் பத்துப்பொருத்தம் பொருந்தி நிற்கும் உன்னைத்
தான் விருத்தம் என்று கூறுவது முறையாகுமோ? மூன்று
|
|
|
|