பக்கம் எண் :

விளக்கவுரை61


கொண்டனர் என்பதை விளக்குகின்றது. வெண்மை, செம்மை, கருமை,
பொன்மை, பசுமை என்பன வண்ணங்கள் ஐந்து. எழுவகை வண்ணம்
இக்காலம் கூறுவார் உளர் எனினும் அக்காலவியல்பு அது என அறிக.
“ல்வகை வடிவிரு நாற்றமை வண்ணம்” என்ற நன்னூற் பாவினையுங் காண்க.
தமிழுக்கு நூறு வண்ணங்கள் உள்ளன வென்றது யாப்பருங்கலக் காரிகையில்
“எழுத்துப் பதின்மூன்று..........வண்ணங்கணூறொன்ப தொண் பொருள்
கோள்..........யாப்புள் வகுத்தனவே” என்ற காரிகைக் கருத்தை விரித்ததாம்.
தூங்கேந் தடுக்கு.... தாங்கா துறழ்தரத்தாம் வண்ண நூறுந் தலைப்படுமே”
என்ற உரைக்காரிகையும் விரித்துணர்க. மக்கள் வண்ணங்களை யாக்கினர்;
முயற்சியால் ஆயின எனவும், நீ நோக்கியபோதே நூறு வண்ணங்களும்
தோன்றின எனவும் தோன்றுமாறு ஆக்கிய, நோக்கிய, என்ற அடை
புணர்த்திருக்கும் அருமை யுணர்க. நா + குலவும் நாக்கு + உலவும் =
நாக்குலவும். இருவகையும் ஒருவகைப் பொருளே தரும். ரசம் - சுவை. ஊனம்
- குறைவு. நாவிற்றோன்றியுடனே மறைவது குறை. பாவிற்சுவை செவிவழிச்
சென்று நின்று பயன்தருவது ஆதலின் இதற்குக் குறை கூறினர் என்று
கொள்க. நவம் + ரசம் = நவரசம் - ஒன்பது சுவை: வீரம் அச்சம் முதலியவை.
முன்னர்க் கூறியதுணர்க. ஏனோர் - மற்றையோர்; தமிழையன்றி யுள்ள மனிதர்
தேவர் நாகர் முதலாயினோர். வனப்பு - அழகு; இஃது ஒரு பண்பு
எல்லார்க்கும் உண்டு. எட்டு வனப்பு எவர்க்கும் இல்லை, உனக்கே அவை
பொருந்தின எனச் சிறப்புக் கூறியதாயிற்று. “அம்மையழகு.....வனப்பெட்டே”
(தொல். செய் 235) மொழிவேந்தர்: வினைத்தொகை. மொழியப்படும் வேந்தர்
எனப் பொருள் கொள்க. பொருள் கொள்ளும் வகை, பொருள் கோள்வகை.
“உறுபொருளுமுல்கு பொருளுந்தன் னொன்னார்த், தெறுபொருளும் வேந்தன்
பொருள்” என்ற குறட்பாவின் கருத்தையொட்டி மூன்று எனக் கூறினர்.
உறுபொருள் - உடையவரின்மையால் தானே வந்து சேரும் பொருள்; உல்கு
பொருள் - சுங்கம்; அயல்நாட்டுப் பொருள் ஏற்றும் வரி இறக்கும்