பக்கம் எண் :

விளக்கவுரை60


சொல்லப்பட்ட மன்னர்கள் வாங்கும் பொருள் கோள்வகை மூன்றேயாம்.
நீயோ பொருள்கோள்வகை யெட்டுடையாய். அழகு பொருந்த ஒரு முப்பால்
உடையாய், அன்றியும் ஐம்பாலும் உடையாய்; உன்னைப் போலச் சீர்
முப்பதும் பெற்ற செல்வர்கள் யார்? ஒருவருமில்லையே.

     (வி - ம்.) குறம் என்பது குறவஞ்சி, பள் என்பது பள்ளுப் பிரபந்தம்
என்ற நூல்களை யுணர்த்தின, வெளிப்பொருளாகக் குறவர் பள்ளர் என்ற
குலத்தையும் உணர்த்துவதாயின. மூன்றினம் என்பது தாழ்ந்த அனுலோமர்
பிரதிலோமர் சங்கரர் என்ற குலத்தாரையும்; தாழிசை, துறை விருத்தம் என்ற
மூன்று பாவினங்களையும் உணர்த்தி நின்றது. கொள்வார் கொடுப்பார்; பெண்
கொள்பவர் கொடுப்பவர் எனவும், பாடிக் கொடுப்பார் எடுத்துப் படிப்பார்
எனவும் பொருள்காட்டி நின்றன. குறவஞ்சி, பள்ளு என்ற நூலின்
வரையறையின்றிப் பாவினம் அமைக்கும் வழக்கமுண்டோ என
வினவியதாயிற்று. சிந்து என்று ஒரு பாவிற்குப் பெயர் கூறுகின்றனரோ!
அப்பெயர் நின் பெருமைக்குத் தகுமோ! அந்நாக்குச் சிதையுமன்றோ!
சிதையவேண்டும் அஃது என்ன பாடல்; பெருமையுடையதா? இல்லை.
இராசதம், தாமதம், சாத்துவிகம் என்ற முக்குணங்களே மக்கள் பெற்றனர்;
வானவரும் அவற்றையே பெற்றார்; பத்துக் குணங்கள் பெற்றவர் பார் மேல்
எவரும் உளரோ? நீதான் பத்துக் குணங்கள் பெற்று வாழ்கின்றாய்! பத்துக்
குற்றங்களும் இல்லாமல் வாழ்கின்றாய் எனச் சிறப்பித்ததாயிற்று. “குன்றக்
கூறல்” முதலிய குற்றங்களைக் கூறிச் “சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்”
என்ற நன்னூற் சூத்திரப்படி பத்தழகுகளைக் குணமெனக் கூறலாம். அது
பொருத்தமின்றெனில் “செறிவே தெளிவே சமனிலையின்பம், ஒழுகிசை யுதார
முய்த்தலில் பொருண்மை, காந்தம் வலியே சமாதி யென்றாங், காய்ந்த வீரைங்
குணனு முயிரா, வாய்ந்த வென்ப வைதருப் பம்மே” என்ற தண்டியாசிரியர்
கூறிய குணங்களைக் கொள்க. ஆசிரியர் கருத்தெதுவோ அறியேம்?
குற்றமிலா என்று அடைகொடுத்தது அழகைக் குணமெனக்