பக்கம் எண் :

விளக்கவுரை59


போல இருப்பது ஒருவகை; கரும்பு கடித்துச் சுவைத்து இனிமை
காணப்படுவது போலப் பிரித்துப் பொருத்தி ஆய்ந்து பொருள் காணப்படுவது
ஒருவகை. தேங்காய் மட்டையுரித்துப் பின்னர் உடைத்தெடுத்துக் கடித்துச்
சுவைக்கப் பயன் தருவதுபோலச் சொற்களைப் பிரித்து அருமையாக
வருந்தியுழைத்துப் பொருள் காண்பது ஒருவகை. இவ்வாறு பலவகைப்பட்ட
பாவடியாய் நீயிருக்கின்றனை என்பது தோன்ற “ான்முந்திரிகை.....
இளங்கனியாய்” என்றார். இவ்வியல்புடைய செய்யுளை வடமொழி நூலுடையார்
க்ஷீரபாகம், திராட்சா பாகம், கதலீபாகம், இட்சுபாகம், நாளிகேரபாகம் என்பர்.
பாகம் - இயல்பு, தன்மை என்பதையுணர்த்தும். நாளிகேரம் - தென்னை.
இளங்கனி - முற்றாத காய் என்க. காயைப் பழம் என்று கூறும் வழக்கினால்
இளங்கனி என்றார் “காய்மாண்ட தெங்கின் பழம் வீழ” (சீவக.) எனவும்,
“தென்னம் பழம்வீழ சோணாடா” (முத்துக். பிள்ளைத்) எனவும், “தெங்கம்
பழங்க முகின்குலைசாடி” (திருக்கோவையார்) எனவும் வருவன காண்க.
‘விண்ணப்ப முண்டு கேள்’ என்று பின்னும் தமிழின் சிறப்பே பேசுகின்றார்
காண்க.

     70 - 78 : மண்ணிற்................செல்வரார்

     (பொ - ரை.) தமிழே நின்னிடத்திருந்து குறம் எனவும் பள் எனவும்
புலவர் கொள்கின்றனர், அவற்றைக் கொடுக்குமுனக்கு மூவகையினத்தினும்
உறவுண்டோ? பாவின் வலிமையெல்லாம் பொருந்தி யெந்நாளும் கெடாத
மணியாயிருக்கும் உன்னைச் சிந்து என்று சொல்லிய நாவானது கெடுமே.
வானத்துமேலுள்ள தேவர்களுங்கூட மூன்று குணம் தாம் பெற்றுள்ளார். நீயோ
பத்துக் குற்றமில்லாமல் பத்துக் குணம் பெற்றிருக்கிறாய். ஒருவரால்
ஆக்கப்பட்ட வண்ணங்கள் ஐந்தின் மேலுண்டோ? இல்லை. நீ நோக்கிய
வண்ணங்கள் நூறுடையாய். நாக்கின்கண் உலவும் குறைவான சுவைகள்
ஆறன்றி வேறு உண்டோ? நீயோ செவிகட்கு உணவான ஒன்பது
சுவைகளையும் உடையாய். மற்றையுலகத்தில் வாழும் மக்கட்கு அழகு என்பது
ஒன்றுதான் அன்றி அதிகமுண்டோ? நீயோ வனப்பு எட்டுடையாய்.