- மற்றதனை, நல்லா
ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன், புல்லறிவு காட்டி
விடும் (நாலடி 314) தானுமோர் புன்கோட்டி கொள்ளுமாங் கீழ் (நாலடி
260) அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய, நூலின்றிக் கோட்டி கொளல்
(குறள் 401) என வருவன கீழ்மக்களியற்கையைக் காட்டும். இதனை
இளங்கோவடிகள், வெள்ளைக் கோட்டி என்பர். கோட்டி - கூட்டம்.
கயவரவை காட்டும் ஒரு சொல் அது. தூர்கட்டி அடிப்பக்கம் பருத்து. தமிழ்ப்
பயிருக்கு அகன்று, பரந்து விரிந்து எனப் பொருள் கொள்க. சொல்லேருழவர்
தொகுத்து ஈண்டிச் செய்யுள் ஆகிய வயலில் ஒருநான்கு பாவாகிய வரம்பை
உயர்த்திப், பாவினமாகிய நீர்பாயுமடைவகுத்து, எட்டு வனப்பாகிய அழகுடன்
விளங்க, நாற்கரணமாகிய ஏரினைப் பூட்டி நால் நெறியாகிய விதையை
விதைத்து நாற்பொருளாகிய பயனை விளைவிக்கும் நாளில் (தமிழ்ப் பயிர்
வளர்க்கும் நாளில்) சீத்தையர் களைகளாக முளைக்க (வெளிப்பட) பாண்டியன்
வில்லி கூத்தன் இவர் குட்டியும் செவியறுத்தும் வெட்டியும் அக்களைகளைக்
களைய நீ மேன்மையாய்ப் பரந்து வளர்ந்தனை என விளக்கங் கொள்க.
68 - 70 : பான்முந்திரிகை.......................விளம்பக்கேள்
(பொ - ரை.)
பாலும் முந்திரிகைக் கனியும் வாழைப்பழமுமாகி
வளர்ந்த கரும்பாகித் தென்னையின் இளங்கனியாகி இனிக்கும் தெளிவான
அமுதமாகி அவ்வமுதினும் மேலான முத்தியைத் தரும் ஒரு கனிபோன்ற
தமிழே! இயல் இசை நாடகம் என்ற மூவகையான தமிழ் மொழியே! அறிவால்
உண்ணப்படும் தேன் போன்றாய்! உன்னோடு மகிழ்ந்து கூறும் வேண்டுகோள்
ஒன்று உளது. அதனை நான் சொல்ல நீ கேட்பாய்.
(வி - ம்.)
பால், முந்திரிகை, வாழைக்கனி, கரும்பு, நாளிகேரம்
இவைகள் செய்யுளின் இயற்கைக்கு எடுத்துக்காட்டும் உவமை. பால் எளிதாகப்
பருகிப் பயன் கொள்வதுபோல எளிதாகப் பொருள் காணும் இயற்கையுடைய
கவி ஒருவகை. முந்திரிகைப் பழம் சுவைப்பதுபோலச் சிறிது ஆய்ந்து பொருள்
காணும் இயல்புடையது ஒருவகை. வாழைக்கனி தோலுரித்தாற் பயன்படுவது
|
|
|
|