விதையாக நன்கு விதைத்து
நாற்பொருளையும் மேலே விளையும் பயனாகச்
செய்விக்கும் நாளில் மேலோரில் கவிபாடுவதைத் தனதாகக் கொண்ட
பிள்ளைப் பாண்டியனும் வில்லியும் ஒட்டக்கூத்தனும் ஆகிய இவர்கள் மூவரும்
பல நூல்களைக் கல்லாமல் அவையிற் புலவரென அமரவரும் கீழ்மக்களைக்
குட்டியும் செவியறுத்தும் தலைகளை யெல்லாம் கூட்டி வெட்டியும்
சீத்தையராகிய களைகளைப் பறிக்க நீ மேலாகத் தூர் கட்டி வளர்ந்தாய்.
(வி - ம்.)
அரியாசனம் என்பது அரிந்த பனையேடாகிய ஆசனம்
(இருக்கை) என்பதுமாம். பனையேட்டில் எழுதப்பட்டிருந்தால் உனக்கு
ஒப்பிலர் ஒருவரும் என்பது ஒருவகைக் கருத்து. அது அத்துணைப்
பொருத்தமின்று. பூமியில் தலைமை உனக்குத் தந்தால் மற்றை மொழிகளினும்
உயர்ந்து நிற்பாய்: இந்நாள் ஆங்கில மொழியின் கீழடங்கி நிற்கின்றாய்
என்பது கருத்து.
பா ஒரு நான்கு: வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா
என்பன.
இனங்கள்: தாழிசை துறை விருத்தம். நாற்கரணம் மனம், புத்தி, சித்தம்,
அகங்காரம் என்பவை. சொல்லேருழவர் - புலவர். சொல்லை விதைத்துப்
பொருட்பயன் கொள்வார் என்ற காரணத்தால் அமைந்தது. நல் ஏர் - நல்ல
வனப்பு - அம்மையழகு தொன்மை தோல்விருந், தியைபு புலனிழை
பெனவனப் பெட்டே என்றது கொள்க. வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம்,
மாகதம் என்பன நெறிநால். இது, உ.வே.சா. அவர்கள் குறிப்பு. இந்நெறி
வடமொழியிலுள்ளனபோலும். தண்டியாசிரியர் வைதருப்பம் கௌடம் என்ற
நெறியிரண்டே கூறினர். நாற்பொருள்: அறம்பொருள் இன்பம் வீடு.
மேலோரில் - அரசர்களில். பா தனதா கொண்ட பிள்ளைப் பாண்டியன் -
பாப்பாடுவதைத் தனக்குரிய தொழிலாக்கிக் கொண்ட பிள்ளைப் பாண்டியன்.
இவன் அதிவீரராம பாண்டியன். கல்லாது கோட்டிகொளும் சீத்தையர் - பல
நூல்களையும் கற்றுணராது புலவர் எனப் பேரிட்டு நல்லவையினும்
சென்றமரும் கீழோர்கள். கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற்,
பெற்றதாம் பேதையோர் சூத்திர
|
|
|
|