என்று கூறியதும் காண்க.
சோழ நாட்டிலுள்ள கூடலூரைக் குறித்ததாகக்
கொள்ளலும் தகும். விக்கிரம சோழன், குலோத்துங்கன், இராசராச சோழன்
என்ற மூவர்மீதும் ஒட்டக்கூத்தர் உலாப் பாடியிருப்பினும் இங்கே
குறிக்கப்பட்டது இராசராசனுலாவேயாம். இச்செய்தி சங்கர சோழனுலாவில்
தெள்ளித்தம், முன்னாள்நகரிலவன் மூதுலாக் கண்ணிதொறும், பொன்னாயிரஞ்
சொரிந்த பூபதியும் எனக் கூறப்பட்டமை காண்க. பராவும் - துதிக்கப்படும்.
அவன் என்றது கூத்தனையே எனக் கொள்க; குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
பாடியவன் அவனே யாதலின். ஒருபா ஒருபஃதும் என்பது முதல்,
பிள்ளைத்தமிழும் என்பதிறுதியாகக் கூறிய நூல்களையும் மற்றுமுள்ள
நூல்களையும் முன்னாம் எனத் தொகுத்தார். முன்னாம் - (இவைகள்)
முதலாகிய. பேராத - நின்றநிலையை விட்டுப் பெயராத; அழியாத; நிலைத்த.
பல் குரவர் வெள்ளத்தினும் மிகுத்தோர் என்று கூட்டுக. வெள்ளம் என்பது
ஒரு பேரெண். குரவர் - சான்றோர்; வீரர். இங்கு
மெய்காப்பாளரையுணர்த்துவதாகக் கொள்க. தமிழாகிய பார்வேந்தே
ஈங்குக்கூறிய நூல்கள் முதலாக வெள்ளத்தினும் மிகுந்த நூல்களாகிய
மெய்காப்பாளர் நின் மெய்யைக் காத்து நிற்க எனப் பொருள் கூட்டுக. பாடல்,
மனவீரத்தைத் தந்து தீவினைகளை நீக்கி நல்வினைகளைச் செய்விக்கும் என்ற
கருத்தடங்க உள்ளத்து வீரியஞ் செய்து..... கவிதையே என்றார். ராசகாரியம்
என்பது, அரசர்க்குரிய செயல் எனவும் முதன்மையான நல்வினை எனவும்
பொருள் பயந்து நின்றது.
61 - 68 : பாரில்.............வளர்ந்தனை
(பொ - ரை.)
இப்புவியிற் சிங்காதனம் உனக்குக் கிடைத்தால் உனக்கு
ஒப்பாவார் ஒருவருண்டோ தமிழே விரிந்து நிறைந்த விளங்கிய ஒருநான்கு
பாட்டும் செய்யுள் வரம்பாகவும் புகழப்படும் பாவினங்கள் மடைபோக்காகவும்
நிகழ நல்ல அழகுடன் செய்யுள் நான்கு கரணங்களையும் ஏராகப் பூட்டிச்
சொல்லேருழவராகிய புலவர் தொகுத்து நெருங்கி நின்று நான்கு நெறிகளையும்
|
|
|
|