பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
102

 

     விளையாட்டுள்  இதுவுமொரு  விளையாட்டாகவும்,  தலைவன்  குறியிடத்து வரின்   தனித்து   அவ  னைக்  கூடவேண்டும்  என்னுங்  கருத்தாகவும்  புனங்
காத்தாளென்றும், தலைவன்  கூர்வேலிளைஞரும்  வேட்டை  விருப்பாற்  சூழ்ந்து
பிரிந்து   செல்லாநிற்ப,   இவனும்    வேட்கை    மீதூரப்பட்டுப்    பாங்கியாற்
கூடவேண்டுமென்னுங்   கருத்தினால்,  தலைவி  குலமுறைமை  ஒருவர்க்கொருவர்
தழையும் கண்ணியும்  கொடுத்துக் காண்டலும் இவர் அவற்றையேற்றுக்  கோடலும் தொன்று   தொட்டு   நடந்துவரும்   இயல்பாதலால், தழையும் கண்ணியும் ஏந்தி
வந்துநின்று குறையிரந்தான் என்றுங் கூறியது மாறுபாடன் றென உணர்க. எனவே, எளியளாய்ப்  புனங்காத்தாளும்   அல்லள்,   எளியனாய்க்   குறையுற்றிரந்தானும்
அல்லன் என்பது தோன்றியவாறு உணர்க.



பாங்கி மதியுடன்பாடு முற்றிற்று.