|
|
பாங்கி குலமுறை கிளைத்தல்: |
பாங்கி குலமுறை கிளத்தல் என்பது, தலைவன் இவ்வாறு கூறியதற்குப் பாங்கி குலமுறைமையால் இயையாது என மறுத்துக்கூறல். |
| நீவே றுரைக்கின்ற தென்குற மாதெங்க ணேரிழையோர் மாவேழ வன்படை வாணன்தென் மாறை மணியையன்றித் தாவேது மில்லாத் தமனிய மீது தலம்புரக்குங் கோவே அழுத்துவ ரோவறி யோருங் குருவிந்தமே.
|
(இ-ள்.) இவ்வுலகைப் புரக்குங் கோவாகிய தன்மையைப் பெற்றோய்! நீ இயையுந் தன்மையைக் கூறாது இயையாது கூறிய தென்னை? எங்கள் நேரிழை குறமாது, போர்செய்யும் பரியும் வேழமும் வலிய படையாகவுடைய வாணன் தென்மாறை நாட்டிற் பிறக்கும் மணியையன்றிக், கேடேதும் இல்லாத பசும்பொன்னின் மீது வறுமையுற்றோருங் குருவிந்தத்தை யழுத்துவரோ என்றவாறு. |
`எங்க ணேரிழை குறமாது` என இயையும். `மாவேழம்` என்புழி, உம்மைத்தொகை. மணி - பதுமராகம். தா - கேடு. தமனியம் - பொன். தலம் புரத்தல் - உலகைக் காத்தல். |
வறியோர் - நல்குரவோர். `அன்றி` என்னும் வினையெச்சக் குறிப்பு. `அழுத்துவரோ` என்னும் முற்றுவினை கொண்டது; ஓகாரம் எதிர்மறை. `வறியோரும்` என்னும் உம்மை இழிவு சிறப்பு. |
`குருவிந்தம்` என்பது 1`கதிர்நிறை பரப்பு மணிமுடித்தேவர்கள்` என்புழி, குரவிந் தஞ்சௌ சந்திகோ வாங்கு, சாதுரங்கம் என்னுஞ் சாதிகள் நான்`கில் ஒன்று என்று கூறிப், பின்னும் அப்பாட்டிலே, |
| `செம்பஞ் சரத்தந் திலகமு லோத்திரம் முயலின் சோரி சிந்துரங் குன்றி கவிரல ரென்னக் கவர்நிற மெட்டும் குருவிந் தத்திற் குறித்தன நிறமும்`
|
என்று கூறியவதனால், `குருவிந்தம்` என்பது பதுமராகமணிக்குப் பொதுமணியாவதும், உச்சிக் கதிர்போலக் கதிரெழுவதாங் கதிரில்லாதது எட்டுவகையில் ஒரு நிறங்கொண்டிருப்பதும் குருவிந்தக்கல் என்ற கண்டுகொள்க. |
(82) |
|
1. கல்லாடம் - 99. |