பக்கம் எண் :

கட
157
இரவுக்குறி

 
       கக்காநிற்கும்;  சிங்கங்கள்  எவ்விடத்துங்  கொல்லுந்   தொழிலையுடைய
கரிகளை யிரை யாகத் தேடி வருந்திக் திரியாநிற்கும்; கங்குற்பொழுதில் நீ  வந்தது
எப்படியோ என்றவாறு.

     எனவே நீ வருதல் தகுதியன்றென்று கூறியவாறாயிற்று. மலைமாது - வீரமகள்;
மலைதல் - பொருதல். சிலை - வில். மால் - மேகம்.  உரும் - இடி.  உமிழ்தல் -
கக்கல். தேர்தல் - ஆராய்தல்.  உழலல் - வருந்தித் திரிதல்.  பொற்கலை மான் -
மேகலையுடைய தலைவி.
(164)    
  இறையோன் நெறியின தெளிமை கூறல்:
வடுவரி நீள்கண்ணி அஞ்சலம் யாந்தஞ்சை வாணன்வெற்பில்
கொடுவரி கேழற் குழாம்பொரு கொல்லையுங் குஞ்சரத்தேர்ந்
தடுவரி தாவும் அடுக்கமுஞ் சூர்வழங் காறுமைவாய்க்
1கடுவரி நாகந் தவாமல்கு கல்லளைக் கானமுமே.

     (இ-ள்.) வடுப்போன்று  வரியோடுகூடிய  நீண்ட    கண்ணை   யுடையாய்!
தஞ்சைவாணன் வெற்பிடத்துப் புலிக் குழாமும் பன்றிக்குழாமும்  ஒன்றோடொன்று
பொரப்பட்ட  கொல்லைக்  காடும்,   குஞ்சரத்தைத்  தேடிக்  கொல்லும்  சிங்கம்
தாவப்பட்ட   மலைப்பக்கமும்,   அச்சத்தைக்   கொடுக்குஞ்   சூராமகளென்னுந்
தெய்வப்பெண் இயங்கும் வழியும்,  ஐந்து வாயும் விடமும் வரியுமுடைய நாகங்கள்
தவர்ந்து செல்லும் நெருங்குகற்களின்  வளைகளையுடைய  காடும் யாம் அஞ்சலம்
என்றவாறு.

     வடு - மாவடு.   வரி - செவ்வரி.   கொடுவரி - புலி.    கேழல் - பன்றி.
தேர்தல் - ஆராய்தல். அடுக்கம் - மலைப்பக்கம். சூர் - சூரரமகள். ஆறு - வழி.
வழங்கல் - இயங்கல்.   தவா - தவாமல்;    நீங்காமல்.   கல்லளை - கல்வளை.
அடுதல் - கொல்லுதல்.       அரி - சிங்கம். அடு: முற்றியலுகர      மாதலான்
வகரவுடம்படுமெய் பெற்றது. தாவுதல் - பாய்தல்.
(165)    
பாங்கி யவனாட் டணியியல் வினாதல்:
     பாங்கி அவன் நாட்டு  அணி இயல்  வினாதல் என்பது,  பாங்கி தலைவன்
நாட்டுப்  பெண்களணியும் அணியையும் இயலையும் வினாதல். இயல் - புனைதல்,
முடித்தல், விளையாடிடம் முதலியன.

எனவே  தலைவன்  நெறியினது  எளிமை  கூறியவழி   நன்றென்று   கூட்டற்கு
உடம்பட்டுக் கூறாது, அணியியல் வினாதல் வினாவழு

(பாடம்) 1. கடுவரி நாகக் குழாமல்கு.