பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
170

 
1அவட்கொண்டு     சேறலும்     ஆகிய     நான்கும்      கூட்டற்குரியன.

தலைமகன் தலைமகளை யெதிர்ப்படுதல், தேற்றலும், புணர்தலும் ஆகிய  மூன்றும்
கூடற்குரியன.

தலைமகன் புகழ்தலும், கையுறை காட்டலும் ஆகிய இரண்டும் பாராட்டற்குரியன.

தலைமகன்    தலைவியை    இல்வயின்   விடுத்தலும்,   பாங்கி   தலைமகளை
இற்கொண் டேகலும், ஆகிய இரண்டும் பாங்கிற்கூட்டற்குரியன.

நேராதிறைவி  நெங்சொடு  கிளத்தலும்,   தலைமகன்  அற்றின   தருமைநினைந் 
திரங்கலும், பெருமகன் மயங்கலும்,  தோழி  தலைமகள்  துயர் கிளந்து விடுதலும் 
ஆகிய நான்கும் உயங்கற்குரியன.

பாங்கி குறியுய்த்  தகறலும்,  திருமகட் புணர்ந்தவன்  சேறலும்  ஆகிய இரண்டும்
நீங்கற்குரியன.

உயங்கல் - வருந்துதல்.
இத்துணையும் ஏழாநாட் செய்தியென் றுணர்க.
(189)    

1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 43.