|
|
அஃதாவது, எட்டாநாள் இரவுக்குறிக்கண் வந்த தலைமகன் அல்ல குறிப்படுதலால் இடையீடு பட்டுப்போதல்.
|
| 1`அல்லகுறி வருந்தொழிற் கருமை யென்றாங் கெல்லிக்குறி யிடையீ டிருவகைத் தாகம்` |
என்னுஞ் சூத்திரவிதியான் எல்லிக்கறி யிடையீடு இருவகைப்படும். |
அல்லகுறி என்பது, தலைமகனால் நிகழ்த்தப்படுவனவாகிய புள்ளெழுப்பல் முதலியன. எனவே, நீரிற் கல்லெறிதல், இளநீர் வீழ்த்தல் முதலியனவுங் கொள்க. வருந்தொழிற் கருமை என்பது, தலைமகன் வருகின்ற தொழிற்கருமை. |
அல்லகுறி: |
இறைவிக் கிகுளை யிறைவர வுணர்த்தல்: |
| கயல்வென்ற உண்கண்ணி காரண மேதுகொல் கைதையங்கான் அயனின்ற புன்னையி னன்னமெ லாமட லாழியங்கைச் சயமங்கை தன்பெரு மான்தஞ்சை வாணன் தரியலர்போல் துயரம் பெருகி இராவொரு போதுந் துயின்றிலவே.
|
(இ-ள்.) கயலை வென்று மையுண்ட கண்ணாய்! போர் புரியுஞ் சக்கரத்தைத் தரித்த சயமங்கைக்கு இறைவனாகிய தஞ்சைவாணன் தரியலற்போற் கைதையங்காட்டின் அயலிலிருக்கும் புன்னையின் அன்னமெல்லாந் துயரம் பெருகி, இவ்விரவின்கண் ஒரு நாழிகையுந் துயன்றில, காரணம் யாதோ, தெரிந்திலன் என்றவாறு.
|
கைதை - தாழை. புன்னை - புன்னாகம். அடல் - போர். சயமங்கை - வெற்றிமாது. போது - ஈண்டு நாழிகை. உம்மை சிறப்பு. |
(190) |
தான் குறிமருண்டமை தலைவியவட் குரைத்தல்: |
தான் குறிமருண்டமை தலைவி அவட்கு உரைத்தல் என்பது, தலைவி தான் அல்லகுறியிடத்து நின்று தலைவனைக் காணாமையால், மீண்டும் விடியற்காலத்து வந்து பாங்கியுடன் கூறல்.
|
அல்லகுறிப்படுங் காரணம் என்னையெனின், தலைவன் முன்னை நாளிரவில் புன்னைமரத்தின்கீழ் நின்று அதன் மேலிருக்கும் மயில்களை யெழுப்ப, அக்குறியிடத்து வந்து நீங்கிய தலைவி மற்ற நாள் குறிக்கு
|
|
1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 43. |