|
|
வெவ்விய முன்ளையுடைய அழகுபொதிந்த தாளையும் வளைந்த வாயையும் செய்ய சூட்டையும் உடைய வலிய புள்ளாகிய கோழியினம், தங்கள் கோனாகிய முருகவேள் நடந்துவந்தான் என்பதை அறிவில் தெளிந்து இடையிருளில் ஊரை யெழுப்பும் என்றவாறு. |
மன்பதை - மக்கட்பரப்பு. கொன் - அச்சம். தங்கள் கோன் - முருகவேள். பொன் - அழகு. |
(208) |
| இரவுக்குறி யிடையீட்டில் வருந்தொழிற் கருமை ஏழிற்கும் ஒவ்வொன்றுக்கு நந்நான்கு நாழிகையாகக் கொள்வது. இத்துணையும் ஒன்பதாநாட் செய்தியென் றுணர்க.
|
இரவுக்குறி இடையீடு முற்றிற்று. |