பக்கம் எண் :

கட
183
15. வரைதல் வேட்கை

 
அஃதாவது,  இவ்வாறு  இடையீடு  பட்டதனாற்  பத்தா  நாள்  தலைவி வரைதல்
வேட்கையாற் கூறுவது.

  1`அச்ச முவர்த்த லாற்றா மையென
மெச்சிய வரைதல் வேட்கைமூ வகைத்தே`

     என்னுஞ்   சூத்திரவிதியால்   வரைதல்   வேட்கை      மூவகைப்படும்.
தலைமகளைப் பாங்கிப் பருவரல் வினவல் :
  விண்டார் பதிகொண்ட வேற்படை வாணன் விரைகமழ்பூந்
தண்டா மரைமங்கை தங்கிய தஞ்சைநின் தாயர்தம்மோ
டுண்டா கியமுனி வோவன்றி யாயத்தொ டுற்றதுண்டோ
வண்டார் குழலிசொல் லாய்செல்ல லேதுன் மனத்திடையே.

     (இ-ள்.) பகைவருடைய   பதியைக்   கொண்ட   வேற்படையை   யுடைய
வாணனது  மணங்  கமழ்கின்ற  பொலிவு  வாய்ந்த  தண்ணிய    தாமரைமலரில்
இருக்கும்  மங்கை தங்கிய தஞ்சையிலிருக்கின்ற  வண்டார் குழலி,  நின் தாயர்தம் மாலுண்டாகிய    முடினவோ    அல்லது  நின்    ஆயக்கூட்டத்தாரால்   வந்த
இடையூறுண்டோ?  உன்  மனத்திடை நிகழ்கின்ற துன்பம் யாதோ?  சொல்வாயாக
என்றவாறு.

     விண்டார் - பகைவர்.  தண்டாமரை மங்கை - திருமகள்.  வண்டார் குழலி:
அண்மைவிளி. ஆல் உருபு இரண்டிடத்தும் ஒடுவாய்த் திரிந்தன.

  2`மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரிற் றலை`

என்றாற் போலக் கொள்க.
(209)    
அருமறை செவிலி யறிந்தமை கூறல்:
     அருமறை செவிலி அறிந்தமை கூறல் என்பது, தலைவி யரிய
களவொழுக்கத்தைச் செவிலி யறிந்தமை பாங்கிக்குக் கூறல்.

  மாணிக்க மென்கொம்ப ரென்சொல்லு கேன்தஞ்சை வாணன்வெற்பர்
பேணிப் புணர்ந்து பிரிந்தபின் தோன்றலும் பேதைமுகம்
பாணித்த லின்றி மதிகண்டு நாணிய பங்கயம்போல்
நாணிக் கவிழ்ந்தத னாலறிந் தாளன்னை நங்களவே.


1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 47.
2. குறள், வாய்மை - 5.