|
|
இவ்விரண்டுங் காரணமாக வல்லே சென்று பெரியோரை மணமொழிந்து வரவும், நமர் எதிர்கொள்ளவும் தலைவர்க்கும் நமர்க்கும் சொல்லு நீ சொல்லியக்கால் நமர் நின் சொல்லைப் பழியார்; நீ சொல்லையேல் நம் மனைக்குப் பழி யாம்; நம் ஆருயிர்க்கு ஏதம் வருவதற்கு வழியுமாம் என்றவாறு.
|
கயல் விழி: அன்மொழித்தொகை. இல் - ஈண்டுக் குலம். ஏதம் - குற்றம். பிறர் வரைவு நேரின் உயிர்போய்விடுமாதலான், `நமதுயிர்க்கேதம்` என்று கூறியவாறு. `வெறிவிலக்குவித்தல்` முதலிய மூன்று கவியுள்ளும் தலைவற்குக் கூறென்று கூறவில்லையெனின் `விலக்குவித்தல்` `கொள்ளுவித்தல்` எனத் தலைவி ஏவலாய்ப் பாங்கி செயலாய்க் கூறியதனானும் `வரைவுகடா`வினும் இக்கிளவி களின் பொருள்படத் தலைவற்குக் கூறுதலானும், அதிகாரப்பட்டு வருதலானும் தலைவற்குக் கூறென்று கூறியவாறாயிற்று. |
| 1`பருவரல் வினவிய பாங்கிக் கிறைவி அருமறை செவிலி யறிந்தமை கூறலும் தலைமகன் வருந்தொழிற் கருஐம சாற்றலும்` |
ஆக இரண்டும்,
|
| `அலர்பார்த் துற்ற வச்ச கிளவியும் ஆறுபார்த் துற்ற வச்ச கிளவியும்` |
ஆக விரண்டும் நெறிவிலக்குவித்தல் முதலிய நான்கும் ஆகிய எட்டும் அச்சத்திற்கு உரியன. |
| `பாங்கி இறைவனைப் பழித்தலும் துன்புறு பாங்கி சொல்லெனச் சொல்லலும்` |
கூகை குழறுதல் என்பது, கூகை குழறக் கேட்ட தலைவி அஞ்சிக் கூறுதல். |
| `தலைமக னூர்க்குச் செலவொருப் படுதலும் பாங்கி யிறைவனைப் பரித்தலும் பூங்கொடி இறையோன் றன்னை நொந் தியற்பட மொழிதலும் கனவுநலி புரைத்தலுங் கவினழி புரைத்தலுந் தன்றுயர் தலைவற் குணர்த்தல் வேண்டலும் காம மிக்க ழிபடர் கிளவியும் தன்னுட கையா றெய்திடு கிளவியும் குரவரை வரைவெதிர் கொள்ளு வித்தலும்` |
ஆகிய எட்டும் ஆற்றாமைக்கு உரியன. |
(227) |
இத்துணையும் பதினொன்றாநாட் செய்தியென் றுணர்க. |
வரைதல் வேட்கை முற்றிற்று. |
|
1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 48. |