| | ஏர் - அழகு. ஏய்தல் .ஒத்தல். வண்ணம் - அழகு. கார் - கருமை. பீர் - பீர்க்கு. அலர் - பூங்காவி, கருங்குவளை. வார் - கயிறு. கழல் - வீரத்தால் வீரதாகக் காலிற்கட்டுவதோர் ஆபரண விசேடம். கருங்குவளை போன்ற கண், அழுதழுது சிவந்து நீர் கோத்த வதனால், நீர் முகந்த செங்கழுநீர் போன்றது என்று கூறினார். | `வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்` முதலாகப் `பிறர்வரை வுணர்த்தல்` ஈறாகக் கூறிய ஐந்தும் பொய்த்தற்குரியன. `குறிபெயர்த்திடுதல்` முதலாகப் `பகலினு மிரவினும் அகலிவ ணென்றல்` ஈறாகக் கூறிய ஐந்தும் மறுத்தற் குரியன. `உரவோன் நாடும் ஊரும் குலனும் மரபும் புகழும் வாய்மையும் கூறல்` ஒன்றுங் கழறற்குரித்து. `வரைவெதிர் வுணர்த்த`லும், `வரையுநா ளுணர்த்த`லும், `அறிவறி வுறுத்த`லும், `ஆறுபார்த்துற்ற வச்சங்கூற`லும், ஆற்றாந்தன்மை யாற்றக்கூற`லும், `காவன் மிகவுரைத்த`லும், `காமமிக வுரைத்த`லும், `கனவு நலிபுரைத்த`லும் `கவினழிபுரைத்த`லும் ஆகிய உஒன்பதும் மெய்த்தற்குரியன. இவை எல்லாங் குறிப்பினானும் ததவெளிப்படையானும் வரைவு கடாவியவாறு உணர்க. | (247) | வரைவுகடாதல் முற்றிற்று. | | |
| |