|
|
நகையையுமுடைய பொன்னையொப்பாளை மறந்து அவ்விடத்தி லிருக்கவும் வல்லையாதலால், பறந்தாற்போற் செல்லும் பரிபூண்ட தேரைச் செலுத்தாது ஒழிவாயாக என்றவாறு. |
ஆங்கு: உவமவுருபு. இவர்தல் - செலுத்தல். கடவுதல் - செலுத்துதல். ஆங்கு - அவ்விடம். அமைதல் - அமைந்திருத்தல். நிறம் - மார்பு. இவர்தல் - ஏறுதல். வாள் - ஒளி. பொன் : ஆகுபெயர். |
(249) |
தலைவனீங்கல் வேண்டல்: |
தலைவன் நீங்கல் வேண்டல் என்பது, தலைவன் பாங்கியுடன் படுத்தி நீங்கற்பொருட்டு வேண்டிக் கூறல்.
|
| அறையும் பொறையு மணந்தவெங் கானத் தணங்கையில்வைத் திறையும் பிரிவதற் கெண்ணகி லேனெண்ண லார்வரைமேல் மறையும் படிவென்ற சந்திர வாணன்தென் மாறையில்வண் டுறையுங் குழலிசென் றேவரல் வேண்டுமெம் மூரகத்தே.
|
(இ-ள்.) பகைவர் மலைமேல் மறைந்தொழயும்படி வென்ற சந்திரவாணன் தென்மாறை நாட்டிலிருக்கின்ற வண்டுறையுங் குழலி! அணங்கை இல்லிடத்து வைத்து, அறையும் பொறையுங் கூடிய வெவ்விய காட்டகத்து இறைப்பொழுதும் பிரிவதற் கெண்ணுகிலேன்; எண்ணிய தென்னெனில் ஒரு காரியத்தால் எம் ஊரகத்துப் போய் வரல் வேண்டும் என்றவாறு. |
அறை - கற்குகை. பொறை - துறுதல். மணத்தல் - கூடுதல். இறை: ஆகுபெயர். எண்ணலார் - பகைவர். வரை - மலை. மலர் மணங்கொள்ளுங் காரணத்தால் வண்டுறைவதெனக் கொள்க. |
(250) |
தலைவனைப் பாங்கி விடுத்தல்: |
தலைவனைப் பாங்கி விடுத்தல் என்பது, பாங்கி தலைவனை ஊர்க்குப் போய்வருகவென விடுத்தல்.
|
| இல்லத் துறையு மிவள்பொருட் டானுமக் கியானுமொன்று சொல்லத் தவிர்கிலன் சூழ்கழ லீர்சடர் தோய்புரிசை வல்லத் தமர்வென்ற வாணன்தென் மாறையில் வந்துவந்து செல்லத் திருவுளம் வைத்தகல் வீர்நுந் திருநகர்க்கே.
|
(இ-ள்.) அணிந்த கழலையுடையீர்! இல்லிலிருக்கும் இவள் பொருட்டால் நுமக்கு யானும் ஒரு சொற்சொல்லத் தவிராது சொல்ல வேண்டிய தாதலாற் சொல்கின்றேன்; கதிரோனைத் தூண்டும் மதில் சூழ்ந்த வல்ல மென்னும் |