பக்கம் எண் :

கட
233
வரைவு மலிவு

 
 
மாரி - முகில். அஞ்சும்  என்னும்  பெயரெச்சம்   தன்வினை  முதலைக்கொண்டு
முடியாது, பிறவாற்றான் முடிந்தது. வாழி: முன்னிலை வினைமுற்றுச்சொல்;

  1`வாழிய என்னும் செயவென் கிளவி
இறுதியகரங் கெடுதலு முரித்தே`

     என்பதனான்,  வாழி  என்பது  நெடுங்காலம்  என்பது  அவ்   வுரையானு
முணர்க. ஆர்தல் - உண்டல். வேரி - கள். தொங்கல் - மாலை.  விரை - மணம்.
மார்ப: அண்மை விளி. அம்பல் - முகிழ் முகிழ்த்தல். அலர் - வாய்திறந்து ஒருவர்
ஒருவரைநோக்கித்   தூற்றுங்சொல்.   செவ்வி - அழகு.   மணம் - மணச்சடங்கு.
தூரியம் - முரசம். அலர் - மாலை: ஆகுபெயர்.
(285)    
தலைவி மணம்பொருட்டாக
அணங்கைப் பராநிலை காட்டல்:

     தலைவி  மணம்பொருட்டாக  அணங்கைப்  பராநிலை  காட்டல்   என்பது,
தலைவி  மணம்  பொருட்டாகத்  தெய்வத்துக்குச்  சிறப்புச்  செய்து   வாழ்த்திக்
கொண்டு நிற்கும் நிலையப் பாங்கி தலைவற்குக் காட்டல்.

உரவிப் பெருங்கலித் துன்பங்கள் போய்முத லூழியின்பம்
வரவிப் படிதன்னை வாழ்வித்த வாணன்தென் மாறையன்னாள்
புரவிப் புனைநெடுந் தேரண்ண லேநின் பொருட்டணங்கைப்
பரவிப் பரவிநின் றேவரம் வேண்டுதல் பார்த்தருளே.

     (இ-ள்.) புரவி  பூட்டிய  அலங்கரித்த  நெடிய  தேரையுடைய  மனைவனே1
வலிய  இப்பெருங்க  கலியுகத்  துன்பங்கள்  போய்க்  கிரேதாயுகத்து இன்பம் வர
இப்புவியை  வாழச்  செய்த   வாணன்   தென்மாறை    நாடுபோல்வாள்   நின்
பொருட்டாகத்  தெய்வத்தை  வாழ்த்தி  வாழ்த்தி  நின்று  வரம்  வேண்டுதலைப்
பார்த்தருள் வாயாக என்றவாறு.

     உரம் - வலி.   கலி - கலியுகம்.   முதலூழி - கிரேதாயுகம்.    படி - புவி.
புரவி - குதிரை.
(286)    
பராநிலைகண்ட தலைவன் மகிழ்தல்:
  இவ்வித் தகமிவட்ட கெய்திய தெவ்வண மெவ்வுலகும்
வவ்வித் திகழ்புகழ் வாணன்தென் மாறை மணப்பொருட்டல்
நவ்வித் தொகையின் நாணுமென் னோக்கி நறைபுகையாச்
செவ்வித் தகைமலர் தூய்த்தெய்வம் வாழ்த்துந் திருந்தகவே.


1. தொல். எழுத்து. உயிர்மயங்கியல் - 19.