பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
234

 
    (இ-ள்.) எவ்வுலகத்தையும்  கவர்ந்து  திகழ்ப்பட்ட  புகழையுடைய   வாணன்
தென்மாறைநாட்டில்     மான்     தொகுதியினம்     நாணப்பட்ட   மெல்லிய
நோக்கையுடையாள்  மணங் காரணமாக  நறும்புகையைப் புகைந்து  நாட்கொண்ட அழகையுடைய மலரைத் தூவித் தெய்வத்தை வாழ்த்துஞ் சிறந்த  முறைமையாகிய
இவ்வல்லபம் இவட்குப் பொருந்தியது எப்படி என்றவாறு.

    வித்தகம் - வல்லபம்.       பொருட்டு - காரணம்.        `மென்னோக்கி
மணம்பொருட்டு` என இயையும். நவ்வி - மான்.  தொகையினம் - தொக்கவினம்.
நறை - நறும்புகை.     செவ்வி - காலம்.     தகை - அழகு.     தூய் - தூவி.
திருத்தகவு - சிறந்த முறைமை.
(287)    

    `காதலன் முலைவிலை  விடுதமை  பாங்கி  காதலிக்குணர்த்த`லும்,  `தலைவி
மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்ட`லும், வரைவு முயல்வுணர்த்தல்.
`பாங்கி   தமர்வரை    வெதிர்ந்தமை    தலை    மகட்குணர்த்தல்`   ஒன்றும்
வரைவெதிர்வுணர்த்தல்  `நற்றாயுள்ள  மகிழ்ச்சி   யுள்ள`லும்,    `உவகையாற்றா
துளத்தொடு   கிளத்த`லும்,   `தலைவனைப் பாங்கி வாழ்த்த`லும்,   வரைவறிந்து
மகிழ்தல். `தலைமகளணங்கைப் பராநிலை கண்டோன் மகிழ்தல்` ஒன்றும் பராவல்
கண்டுவத்தல் எனக்கொள்க.

 

வரைவுமலிவு முற்றிற்று.
இத்துணையும் ஐம்பத்தொன்றாநாட் செய்தியென் றுணர்க.