பக்கம் எண் :

கட
235
20. அறத்தொடு நிற்றல்

 
     அறத்தொடு  நிற்றல்  என்பது,  களவை  முறையே வெளிப்படுத்தி  நிற்றல்.
முறையே  வெளிப்படுத்தி  நிற்றலாவது,  தலைவி பாங்கிற்கு அறத்தொடு  நிற்கும்,
பாங்கி  செவிலிக்கு அறத்தொடு நிற்கும், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும்,
நற்றாய்  தந்தை  தன்னையர்க்கு அறத்தொடு நிற்கும் என்று கொள்க. அறத்தொடு
நிற்றற்குப்  பொருள்,  முறையே  வெளிப்படுத்தி  நிற்றல்  என்பது.  இப்பொருள்
எவ்விடத்திற்குமாகாது,  இவ்விடத்திற்கு  மாத்திரம்  என்று  கொள்க.   என்னை,
இக்களவொழுக்கம் புனைந்துரையாற் புலவர் நாட்டப்பட்டதன்றி வேறன்று என்பது.
ஆதலால், இக்களவு வெளிப்படுத்தற்கு மாத்திரமே அறத்தொடு நிற்றல் என
அவரால் நாட்டப்பட்ட பெயராயிற்றெனக் கொள்க.

  1`முன்னிலை முன்னிலைப் புறமொழி யென்றாங்
கன்ன விருவகைத் தறத்தொடு நிலையே`

என்னுஞ் சூத்திரவிதியான், அறத்தொடுநிற்றல் இருவகைப்படும்.

கையறு தோழி கண்ணீர் துடைத்தல்:

     கையறு  தோழி கண்ணீர் துடைத்தல்  என்பது,  ஆற்றிக்  கையற்ற  தோழி
அருகிருந்து கண்ணீர் துடைத்தல்; கையறல் - செயலறல்.

     வரைவுமலிவான் மனமகிழ்ச்சியடைந்திருக்கும் தலைவி அழுதுகொண்டிருத்தல்
மாறுபாடு எனின்; மாறுபடாது,  என்னை?  களவுப்  புணர்ச்சியால்   அலர்மிகவும்
எழுதல்கண்டு   தந்தையர்   முதலாயினோர்   வெறுப்படைந்ததறிந்த   தலைவன்
பிரிந்தேக   ஆற்றாமையினால்    தலைவி    அழுதனள்   என்று   செய்யுளிற்
கூறியதின்றெனின்,  மேலே  `கற்பொடு  புணர்ந்த  கவ்வை`யின்,  மகள்  எங்கே
போயினாள்  என்ற  செவிலி  பாங்கியை  வினாவுழி,  2`வெறுத்தா  ரொறுத்துரை
மேலுநங் கேளிர் விழைதலின்றி, மறுத்தா ரவற்கு மணமதனால்` என்பதனாற்
கண்டு கொள்க.

  அயிரார் தடிரைவந்துன் வண்டலம் பாவை யழித்தனவோ
செயிராத அன்னை செயிர்த்தன ளோசெறி நாரைதிண்போர்
வயிரா நரலும் வயற்றஞ்சை வாணன்தென் மாறையிலென்
உயிரா கியதைய னீகலுழ் வானென் னுளங்குழைந்தே.

(இ-ள்.) நெருங்கிய  நாரைகள்  வலிய போர்க்களத்தில்  ஒலிக்குங்  கொம்புபோல்
ஒலிக்கும் வயலையுடைய தஞ்சைவாணன் தென்மாறை
1. அகப்பொருள் விளக்கம், வரைவியல் - 5.
2. தஞ்சைவாணன் கோவை - 324.