பக்கம் எண் :

கட
245
வரைவு கடாதல்

 
வாரணம் - யானை.  `வந்ததோ` என்பதனை  மதிக்குங் கூட்டுக.  மதி - ஈண்டுப்
பிறை.  முயங்கல் - புணர்தல்.   `செல்வர் வந்து`  என   இயையும்.    ஓகாரம்
அனைத்தும் ஐயம்.
(304)    
     `தலைவி பாங்கிக்கு முன்னிலைமொழியால் அறத்தொடு நிற்ற`லும், `செவிலி
நற்றாய்க்கு  முன்னிலைமொழியால்  அறத்தொடு  நிற்ற`லும்  ஆகிய  இரண்டும்,
`பூத்தரு  புணர்ச்சி`. முதல் மூன்றும் முன்னிலைமொழி; `வெறிவிலக்கல்`  ஒன்றும்
முன்னிலைப்புறமொழி.

அறத்தொடு நிற்றல் முற்றிற்று.
இத்துணையும் ஐம்பத்திரண்டாநாட் செய்தியென் றுணர்க.