கட விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணங்கமழ்ந்து, பாதிரியும்1 பராரைஞாழலும் பைங் 2கொன்றையொடு பிணியவிழ்ந்து, பொரிப் புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகை சிறந்து வண்டறைந்து தேனார்ந்து வரிக்குயில்கள் வரிபாடத் தண் தென்றல் இடைவிராய்த் தனியவரை மனிவு செய்யும் பொழிலது நடுவண் ஒரு மாணிக்கச் செய்குன்றின்மேல் விசும்பு துடைத்துப் பசும்பொன் பூத்து வண்டு துவைப்பத் தண்தேன் துளிப்பதொரு வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள். | கண்டு, பரியதோர் காதற்களிகூர்ந்து, தன் செம்மலர்ச் சீறடிமேற் சிலம்பு கிடந்து புடைப்ப, மலரணிக் கொம்பர் நடை கற்பதென நடந்து சென்று, நறைவிரி வேங்கை நாள்மலர் கொய்தாள். கொய்தவிடத்து மரகதமணி விளிம்படுத்த மாணிக்கச்சுனை மருங்கினதொரு மாதவிவல்லி மண்டபத்துப் போதுவேய்ந்த பூநாறு கொழுநிழற் கீழ்க்கடிக்குருக்கத்திக் கொடிபிடித்துத் தகடுபடு பசும்பொற்சிகரங்களின் முகடு தொடுத்துவந்திழிதரும் அருவி பொன்கொழித்து மணிவரன்றி மாணிக்கத்தொடு வயிரம் உந்தி அணிகிளர் அருவி ஆடகப் பாறைமேல் அதிர்குரன் முரசினிரட்ட, வண்டும் தேனும் யாழ் முரல, வரிக்குயில்கள் இசைபாட, தண்டாது தவிசுபடப் போர்த்ததொரு பளிக்குப்பாறைமணித்தலத்துமிசை நீல ஆலவட்டம் விரித்தாற்போலத் தன் கோலக்கலாபம் கொளவிரித்து, முளையிள ஞாயிற்று இளவெயிலெறிப்ப ஓர் இளமயில் ஆடுவது கண்டுநின்றாள்.
| அப்பால், தலைமகனும் 3பற்பனூறாயிரங் கூர்வேலிளைஞரொடு 4நளிமா மலைச்சாரல் வேட்டம் போய் விளையாடுகின்றான், ஆண்டெழுந்ததொரு 5கடமான் பின்னோடிக் காவல் இளைஞரைக் கையகன்று நெடுமான் தேரோடும் பாகனை நிலவுமணற் கான்யாற்று, 6நிற்கச் செய்து, தொடுகழலடி யதிரச் சுருளிருங்குஞ்சி பொன்ஞாணிற் பிணித்து, கடிகமழ் நறுங் கண்ணி மேற்கொண்டு வண்டு மணமயர, அஞ்சாந்தின் நறுநாற்றம் அகன்பொழிலிடைப் பரந்து நாற, அடுசிலையொடு கணையேந்தி வடிவு கொண்ட காமன் போலச் சென்று, அவள் நின்ற இரும்பொழிலிலே புகும். அஃது யாங்ஙனமோ வெனின், வடகடலிட்டஒரு, நுகத்தொருதொளை, தென்கடலிட்ட ஒருகழி
|
| 1. பரவைஞாழலும். 2. கொன்றையும். (பாடம்.) 3. பற்பனூறாயிரவர். 4. குளிர். 5. கடுமான். 6. நிற்கப்பணித்து
| |
|
|