பக்கம் எண் :

கட
27

கைக்கிளை

 

தருவின்  பக்கத்தில் ஒரு பசும்பொற்கொடி, புயலைத் தாங்கிப் பிறையைத்தரித்துப் போர் செய்யும்   வில்லுடன்  கெண்டைமீன்  பொருந்திய தாமரை மலர்ந்து என்
கண்ணெதிரே நின்றது என்றவாறு - இது பொழிப்புத் திரட்டல்.

     (விரிவுரை) `புயலைச்சுமந்து பிறையையணிந்து பொருவிலுடன் கயலேமணந்த கமலமலர்ந்து`   என்னும் வினையெச்ச அடுக்குகள், `நின்றது` என்னும் அஃறிணை
முற்றுவினை  கொண்டு  முடிந்தன.  புயலைப்  பிறையைக்  கமலத்தை  என்னும்
இரண்டாமுருபு தொக்கு நின்றன. ஏகாரம் அனைத்தும் ஈற்றசை. `வயல் பொய்கை`
என்புழி  எண்ணும்மை தொக்கு நின்றது. புவியின் கண் கற்பகத்தருவைக் கூறினது
குற்றமெனின்,    குற்றமன்று.   என்னை,   தேவரெல்லாரும்   பொதியமலையிற் கூடியிருத்தலின்  அம்மலைக்குப்   பொதுஇல்   என்னும்  பெயர்,  இக்காலத்துப் பொதியில்  எனத்  திரிந்து  மரூஉவாய் நின்றது; ஆதலால், தேவரிருக்குமிடத்துக
கற்பகத்தரு    இருக்குமென்பது    துணிபு.    அன்றியும்,    குறுமுனியிருக்கும் மலையாதலானுங்    கூறப்படும்.  கற்பகத்தின் அயலில் நிற்பது காமவல்லிக்கொடி யாதலான், பசும்பொற்கொடி காமவல்லிக்கொடி யென்றுணர்க.

     இக்கவி     கட்டளைக்கலித்துறை     என்றுணர்க.     திலதக்கலித்துறை,
கோவைக்கலித்துஐற   யெனினும்   அமையும்.   இதற்கு விதி.  `நேர்பதி னாறே`
என்னுங்  கட்டளைக்  கலித்துறைச்   சூத்திர   அடியிற் கண்டுகொள்க.  ஆயின்,
`யானுந்  தோழியும்`.   என்பதும்  1  `வென்றான்   வினையின்`      என்பதும்,
கலித்துறையன்றோ வெனிற் கூறுதும்:

2`மூவா முதலா வுலகமொரு மூன்று மேத்தத்
தாவாத இன்பந் தலையாயது தன்னி னெய்தி
ஓவாது நின்றகுணத் தொண்ணிதிச் செல்வ னென்ப
தேவாதி தேவ னவன்சேவடி சேர்தும் அன்றே`

     என்னும்    சிந்தாமணிப்   பதிகச்  செய்யுளில் இதற்குப் பெயர்.  விருத்தத்
தோசையாய்    விருத்தத்திலக்கணம்   நிரம்பாமையானும்,  நெடிலடி  நான்காய்க் கலித்துறை  யோசையிலக்கணம்  நிரம்பாமையானும், விருத்தக்கலித்துறை  யென்று
நச்சினார்க்கினியர் கூறிய உரையான் உணர்க. - இஃது அகலங்கூறல்.

     இதனில் அகப்பாட்டு றுப்பு வருமாறு:
3`திணையே கைகோள் கூற்றே கேட்போர்
இடனே காலம் பயனே முன்னம்


     1. சூளாமணி-காப்பு. 2.சிந்தாமணி. கடவுள் வாழ்த்து - 1. 3.அகப்பொருள் விளக்கம். ஒழிபியல் - சூ. 2.