மெய்ப்பா டெச்சம் பொருள்வகை துறையெனா அப்பால் ஆறிரண்டகப்பாட்டுறுப்பே`
என்பதனான் இப்பாட்டிற்குத் திணை - குறிஞ்சி, கைகோள் - களவு, கூற்று - தலைவன் கூற்று, கேட்போர் - நெஞ்சு, இடம் - பொழிலிடம்.
1`ஒருநெறிப் பட்டாங் கோரியல் முடியுங் கரும நிகழ்ச்சி இடமென மொழிப`
என்பவாகலின். காலம் - இறந்தகாலம், பயன் - காட்சி வியப்பினால் உள்ளமகிழ்தல். முன்னம் - தலைவியைக் கண்டு தலைவன் வியந்து பொருளைக் கூறாது உவமையே கூறுதல். புறத்துக் கண்ட பொருள் காரணமாக நெஞ்சிற்றோன்றிய விகாரத்தின் விளைவு மெய்ப்பாடாதலான், மெய்ப்பாடு - மருட்கை. திருக்கோவையாருரையில் காட்சிச் செய்யுட்குமெய்ப்பாடுஉவகையென்று பேராசிரியர் எழுதினாராலோவெனின், உவகையாகாது, என்னை,கண்டபொருளான் நெஞ்சில் மயக்கந் தோன்றி ஒன்றை யொன்றாகக் கூறுதலின் மருட்கையேயாம் என்க. எச்சம் - நெஞ்சம், பொருள்வகை - ஆற்றொழுக்கு, துறை ஒவ்வோரிடங்களில் அரிதாய் வரும் எனக் கொள்க. வந்தவிடத்து உரையிற் கூறுதும், கண்டுகொள்க.
காட்சிக்குப் பாட்டுப்பாடும் இயல் ஓரினஞ்சார்ந்த பொருளாற் பாட வேண்டும் என்பது இயல்பு. அது சான்றோர் கூறிய கோவைச் செய்யுற்கண்டு கொள்க. ஆயின், இச்செய்யுட்கு ஓரினஞ்சார்ந்தது எங்ஙனமெனின், குறிஞ்சி நிலத்துப் பொருளையே ஓரினஞ்சார்த்திப் பாடியவாறு கண்டுகொள்க. இக்காட்சிக்கன்றி வழிநலைக்காட்சிக்கு எவ்வாறு கூறினும் அமையும். காட்சிக்குக் கண்டபொருளை (அவயவத்தை)க் கூறாது உவமையைக் கூறவேண்டுவ தென்னையெனின், இங்ஙனஞ சிறந்து தோன்றாவிடின் ஐயம் நிகழாதாதலான் இங்ஙனங் கூறவேண்டுமென்பது. வாணன் நாட்டிடத்துப் பொருவிறந்த தலைமகன் பொருவிறந்த தலைமகளைக கண்ணுற்றானென்புழி, கீர்த்தியை நிலைநிறுத்தித் தெய்வத்தோ டொத்தவனாதலின், தேவருள் ஒருவனென்று கூறப்படுமவன் கீர்த்தியிற்பாடும் புலவரால் தோன்றுந் தலைவனும் தலைவியுமாதலான், மக்கட்டன்மையில் பொருவிறந்தா ராயினாரெனக் கொள்க.
இத்தமிழ், நாடகத்தமிழ் எனப்படும். என்னை? கிளவி யொழுங்குபடக் கோத்துக் கதைபோல வந்து நாடகத்துக்