பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
282

 
 1`பல்படை யொருவற் குடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசிய நூழிலும்`
என்னுஞ்  சூத்திரத்தானுணர்க.   இதற்கு   உதாரணம்   மதுரைக்     காஞ்சியிற்
கண்டுகொள்க.   `யான் செல்வேன்`   என்பது   அவாய்   நிலையான்   வந்தது.
(364)    
தமருடன் செல்பவள் அவன் புறநோக்கிக் கவன்றாற்றல்:
தமருடன்   செல்பவள்  அவன்  புறநோக்கிக் கவன்றுஆற்றல் என்பது,  தமருடன்
செல்லப்பட்ட தலைவி அவன் புறங்காட்டிப் போதலை நோக்கிக்   கவலைப்பட்டுத்
தேறுதல்.

  ஏமா னெனவஞ்சு மெற்காத் தலினவ் விரவிபொற்றேர்
வாமாளின் வாழ்வன வாகபன் னாட்டஞ்சை வாணனொன்னார்
போமானதரிடத் தென்னையர் தோன்றப் புறங்கொடுத்த
கோமான் மணிநெடுந் தேர்நுகம் புண்ட குரகதமே.

(இ-ள்.) தஞ்சைவாணனுக்குப்   பகைவராயுள்ளார்   செல்லும்  மான்  சஞ்சரிக்கும்
வழியிடத்து  என்  தந்தையர்   தோன்றுதலைக் கண்டு புறங்கொடுத்துச் செல்கின்ற
தலைவனது  மணியிழைத்த  நெடுந்தேர் நுகத்திற்பூட்டிய குதிரைகள்,  அம்புகண்ட
மான்போல  அஞ்சுகின்ற  என்னைக்  காத்தலால், அவ்வாதித்தனது  பொற்றேரில்
பூட்டிய   வாவுங்   குதிரைகள்  போலப்   பன்னாள்  வாழ்வனவாக  என்றவாறு.

    ஏ - அம்பு. வாமான் - வாவுமான்.

  2`செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகரம்`

என்பதனானுணர்க. அதர் - வழி. குரகதம் - குதிரை. `கவன்றாற்றல்` என்பதனால்,
இக்கிளவி இரக்கத்தின்பாற்படும்.

    `நீங்குங்   கிழத்தி   பாங்கியர்   தமக்குத்  தன் செலவுணர்த்தி விடத்த`லும்,
`தன்செலவு  ஈன்றாட்குணர்த்தி   விடுத்த`லும்,
  `ஈன்றாட் கந்தணர்  மொழித`லும்
ஆகிய மூன்றும் போக்கறிவுறுத்தற்குரிய.
`அறத்தொடு நிற்றலிற் றமர் பின்சேறலைத்
தலைவி  கண்டுரைத்தல்`  ஒன்றும்  அலரறிவுறுத்தற்குரியது. `தமருடன் செல்பவள்
அவன்  புறநோக்கிக்   கவன்றாற்றல்` ஒன்றும் இரக்கத் துக்குரித்தெனக்  
கொள்க.
(365)    
உடன்போக்கு இடையீடு முற்றிற்று.
இதுகாறும் ஐம்பத்தைந்தாநாட் செய்தியென் றுணர்க.

1. தொல். பொருள். புறத்திணையியல் - 17.
2. தொல். சொல். வினையியல் - 41.