|
|
அஃதாவது, தலைவனும் தலைவியும் இல்லின்கண் வாழும் வாழ்க்கையைக் கூறுதல்.
|
| 1`கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சியென் றீங்கு நால்வகைத் தில்வாழ்க் கையே`
|
என்னும் அகப்பொருள்விளக்கச் சூத்திரவிதியால், இல்வாழ்க்கை நால்வகைப்படும்.
|
தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் : |
| நின்மே லடுத்த பசலையின் காரண நின்துணைவி என்மே லடுத்த வியல்பினன் றோபெற்ற தேழுலகும் தன்மே லடுத்த புகழ்த்தஞ்சை வாணன் தமிழ்க்கிரிநுண் பொன்மே லடுத்தன போற்சுணங் கீன்ற புணர்முலையே.
|
(இ-ள்.) நுண்ணிய பொன்மேலே நெருங்க வைத்தாற்போன்ற கணங்கைப்பெற்று இடைவெளியின்றி நெருங்கிய முலையினை யுடையாய்! தன்னிடத்துத் தோன்றிய புகழ் ஏழுலகும் நெருங்கிய தஞ்சைவாணன் தமிழ்ச் சிலம்பிடத்திருக்கும் நின்மேலே நெருங்கிய பசலை நீக்குங் காரணமாக நின் துணைவி என்மேலே நெருங்கிய அன்பின் முறைமையினன்றோ இல்வாழப் பெற்றது என்றவாறு.
|
அடுத்தல் - நெருங்குதல். இன்: நீங்கற் பொருண்மை யுணர்த்தும் உருபாகலான் நீக்கத்தை யுணர்த்தி நின்றது. இயல்பு - முறைமை. தமிழ்க்கிரி - பொதியமலை. நுண்பொன் தகட்டிற் சிதறிய சிறுமைப்பட்ட பொன். புணர்முலை - நெருங்குமுலை. இல்வாழ்க்கை அதிகாரத்தான் வந்தது. |
(367) |
தலைவனைப் பாங்கி வாழ்த்தல் : |
| தெரியா டகவிதழ்ப் பூங்கொன்றை வேணியுந் தேவியும்போல் பிரியா துறையப் பெறுகுதி ராற்பிறை மானுநெற்றிப் புரியாழ் நிகர்மொழிப் பூவையு நீயும் புணர்த்துபல்கேழ் வரியார் சிலையண்ண லேதஞ்சை வாணன்தென் மாறையிலே.
|
(இ-ள்.) பலநிறத்தையுடைய கட்டுதலார்ந்த சிலைமையுடைய அண்ணலே! தஞ்சைவாணன் தென்மாறை நாட்டில், பறை போலும் நெற்றியையும் நரம்புகட்டிய யாழிசைபோன்ற மொழியையும் உடைய |
|
1. அகப்பொருள் விளக்கம், கற்பியல் - 3. |