பக்கம் எண் :

கட
311
30. காவற் பிரிவு

 
அஃதாவது,  நாட்  காத்தற்குப்  பிரியும்  பிரிவு. இவன் நாட்டைப் பிறர்  புகுந்து
நலிதலும் கைக்கொள்வதும்  செய்யப்பட்டவை  நீக்குதற்குப்  பிரிய  ஆண்மையும்
மதிப்பும்  இலனாம்   எனின்,  நாட்டை  நலிவா  ருளராக  நலிவு   காத்தற்குப்
பிரியுமென்பது அன்று; நாட்டகத்து நின்று நகரத்து வந்து முறை செய்ய  மாட்டாத
மூத்தோரும் பெண்டிரும் இருகை முடவரும் கூனரும் குருடரும் பிணியுடையாரும்
என  இத்தொடக்கத்தார்  முறைக்  கருமங் கேட்டுத்திருத்துதல்  பொருட்டாகவும்,
வளனில்   வழி    வளந்தோற்றுவித்தற்கும்,   `வேர்  குலமே  சாலையம்பலமே`
என்றித்தொடக்கத்தனவற்றை   ஆராய்தற்கும்,  மதிசூடி  யோம்புதற்கும்  பிரியும்
என்பது.  அல்லதூஉம்,  பிறந்த  வுயிர்  தாயைக்  கண்டு  இன்புறுவது  போலத்
தன்னாற் காக்கப்படும் உயிர்வாழ் சாதிகள் தன்னைக்  கண்டு இன்புறுதலின்  தான்
அவர்கட்குத் தன்னுருவு காட்டுதற் பொருட்டாகவும் பிரியுமெனக் கொள்க.

தோழி தலைவன் காவற் பிரிவுணர்த்தல்:
  விண்காவல் கொண்ட திலோத்தமை தான்முதல் மெல்லியலார்
கண்காவல் கொண்டருள் காரிகை காவலர் கார்க்கடல்சூழ்
மண்காவல் கொண்ட மனத்தின ராயினர் வாணன் தஞ்சைப்
பண்காவல் கொண்ட மொழிச்செய்ய வாயிதழ்ப் பைங்கிளியே.
(இ-ள்.) விண்ணுலகப்  பதவிக்கு  உலகில்தவஞ்  செய்து  ஒருவர்   வராதபடிக்கு
இடையூறு செய்து காவல் கொண்ட  திலோத்தமை  முதலாகிய மடவார் கண்களை
அயலில்   நோக்கமாற்  காவலாய்க்  கொண்டருளப்பட்ட  அழகையும்,  வாணன்
தஞ்சைநாட்டில்  பண்ணைத்  தன்  வாயினின்றும்   போகாமற்   காதல்கொண்ட
மொழியையும்,    சிறந்த  வாயிதழையுமுடைய  பைங்கிளியே!   காவலர்   கரிய
கடல்சூழ்ந்த மண்ணைக் காவல்கொண்ட மனத்தினராயினர் என்றவாறு.

விண் - விண்ணுலகு.      காரிகை - அழகு.    `காரிகை பண் காவல் கொண்ட`
என இயையும்.
(311)    
தலைமகள் கூர்ப்பருவங்கண்டு வருந்தல்:
  மன்னுயிர் காவலன் வாணன்தென் மாறையில் வந்தளியார்
என்னுயிர் காவல ரேந்திழை யாயித யம்புலர்த்திக்
கொன்னுயிர் வாடை கொடும்பனி நீரிற் குளிர்குழைத்துப்
பின்னுயி ராமலென் மேற்பூசு நாளுமென் பேசுவதே.