|
|
எளிதென எண்ணிக் கடல்நீரைஉட்கொண்டு இடியுடனே மேகம் வாரா நின்றது; இதனைக் கல்வி யெல்லையெல்லாம் காணப்பிரிந்த தலைவர் காண்கிலர், ஆதலால், யான் என் செய்கேன் என்றவாறு. |
யாணர் - அழகு. செய்யா என்னும் வினையெச்சம், செய்து என்னும இறந்தகால வாய்பாடாகப் பொருள் கொள்க. உருமு - இடி. |
(409) |
தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தல்: |
| காதற் கயம்படிந் துன்னொடு காமக் களிநுகரா தோதற் ககன்ற புணர்வுடை யோருடை நீருலக மாதர்க் கமைந்தருள் வாணன்தென் மாறை வரக்கடவர் ஆதற் கணங்களை யாய்புய லேது அறிந்தருளே. |
(இ-ள்.) அணங்கனையாய்! காதலாகிய குளத்திற் படிந்து உன்னொடு கூடிக் காமமாகிய கனியை நுகராது ஓதற்பிரிவாகப் பிரிந்த அறிவுடையோர் பூமிதேவியார்க்கு உடையோனாகி அமைந்தருளப்பட்ட வாணன் தென்மாறையில் வரக்கடவ ராதற்க வந்த புயல் நிமித்தமென்று அறிந்தருள்வாய் என்றவாறு. |
கயம் - குளம். புயல் - மேகம். ஏது - நிமித்தம். |
(410) |
செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால் அறத்தொடு நிற்றல்: |
செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால் அறத்தொடு நிற்றல் என்பது, முன்னிலைப் புறமொழியால் உணர்த்தாது முன்னிலை மொழியனாலே களவை வெளிப்படுத்திக் கூறல். |
ஓதற்பிரிவு முற்றிற்று. |