பக்கம் எண் :

கட

 

தஞ்சைவாணன் கோவை

32

 
     (இ-ள்.) மண்ணிலே   மிகுந்த   புகழையுடைய   தஞ்சைவாணன்  பொதிய
வெற்பிடத்துப்   பெண்மையிற்  சிறந்த   இப்பேதையினது   பார்வை    பெரிய
தீவினையேன் எண்ணத்தின்மிகுந்த பெரிய வேட்கைநோய் தனக்கு  வருத்தப்பாடு
செய்யாது இன்பஞ் செய்யும் மருந்துமாகி, கண்போற்சிறந்த  உறுப்பில்லையாவதும
் காட்டியது.

      துயர்: ஆகுபெயர். வேட்கையை  நோயாக்கலால்  பார்வையை  மருந்தாக உருவகம்    செய்யப்பட்டது.    அவயவம்    பலவற்றினானும்     பயன்தருவ
தின்மையாய்க் கண் பயன்தருவதாய்ச் சிறத்தலின், `கண்ணிற் சிறந்த  வுறுப்பில்லை
யாவதுங் காட்டியது` என்று கூறியது.

      காட்சி     முதல்    குறிப்பறிதல்  ஈறாக   நான்கும் கைக்கிளையென்று
கூறப்படுதலின், கைக்கிளையுள் தலைவி வேட்கைக் குறிப்பினையறிந்தான் என்புழி,
கைக்கிளை   யென்பதனோடு     மாறு   கொள்ளும்;  மற்றென்னை   யெனின், மாறுகொள்ளாது; என்னை,

      தலைமகள்  பார்வை  பொதுப்பார்வையே.  இவன் தன் அவா மிகுதியால்
பார்வையில் வேட்கையுளதென்று கருதினானென்பதாயின்,தலைவன் அறிவிலனாம்;
மற்றென்னை  யெனின்,தலைமகள்  வேட்கைக்  குறிப்பால  பார்த்தாள் என்புழிப்
புணர்ச்சிக்கு   உடன்பட்டாளாயிற்று;   உடன்பட்டாள்  எனவே தொல்லாசிரியர்
கைக்கிளையிற் கூறார்.

     1மெய்ப்பாட்டியலில் தலைவிக்குக் கூறிய அவத்தையில்,
`புகுமுகம் புரிதல் பொறிநுதல வியர்த்தல்
நகுநய மறைத்தல் சிதைவு பிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப`

- (முதல் அவத்தை)    

`கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலோ
டூழி நான்கே இரண்டென மொழிப`

- (இரண்டாம் அவத்தை)    

`அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்
இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலொடு
சொல்லிய நான்கே மூன்றென மொழிப`

- (மூன்றாம் அவத்தை)    

  `பாராட் டெடுத்தல் மடந்தப வுரைத்தல்
ஈரமில் கூற்றம் ஏற்றவர் நாணல்
கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ
எடுத்த நான்கே நான்கென மொழிப`

- (நான்காம் அவத்தை)    


     1. தொல். பொருள். மெய் - 13, 14, 15, 16.