| துணையில்லாத எனது உயிர்க்கு அரணும் மானும் அனைய கண்ணாள ்கொங்கையை யொப்பாதல் உமக்கு அரிது என்றவாறு. | செய்குன்று: வினைத்தொகை; செய்குன்றாவது - மாதர் விளையாடுவதற்கு மரகதமணியாற் செய்யும் மேடை. செவ்வனம் என்புழி ஏழாம் வேற்றுமைத் தொகை. முரண் - மாறுபாடு; மாறுபாடாவன - மழையில் நனைந்தும், வெயிலில் உலர்ந்தும், பனியில் குளிர்ந்தும், காற்றில் அலைபட்டும் நிலையிற் பிரியாதிருத்தல். மா - பெருமை. முயன்று - வருந்தி. முளரி மங்கை - திருமகள். சரண் - அடைக்கலம். தனி - துணையின்மை. அரண் மான் என்புழி உம்மைத் தொகை; மதன்போர்க்கு அரணாயிருத்தலின் அரண் என்று கூறியது. போல்தல் - போறல்.
| | 1`நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலும்` | என்பதனான் நிலைமொழி லகரங்கெட்டு,
| | 1`லனவென வரூஉம் புள்ளி முன்னர்த் தீநவென வரிற் றனவா கும்மே` | என்பதனான், வருமொழித் தகரங்கெட்டு றகரமாய்ப், போறல் என முடிந்து நின்றது. செய்தாலும் என்புழி உம்மை அருமை தோன்ற நின்றது.
| | `இரந்து பின்னிற்றற்கெண்ணல்` முதல், `நீடுநினைந்திரங்கல்` ஈறாகிய ஒன்பதனுள், `வழிபாடு மறுத்தல்` ஒன்றும் ஒழித்து ஒழிந்த எட்டும் வேட்கை யுணர்த்தற்கு உரியன. வழிபாடு மறுத்தல் ஒன்றும் மறுத்தற்கு உரித்து. மறுத்தெதிர் கோடலும், வறிதுநகை தோற்றலும் ஆகிய இரண்டும் உடன்படற்கு உரியன. முறுவற் குறிப்புணர்தலும், முயங்குத லுறுத்தலும், புணர்ச்சியின் மகிழ்தலும், புகழ்தலும் ஆகிய நான்கும் கூட்டத்திற்கு உரியனவாம்.
| இங்ஙனம் புணர்ந்த தலைவன் புணர்ச்சியால் வேட்கையிற் குறைபாடுளனோ, முன்போலும் வேட்கையுடையனோ என்னும் இரண்டில், வேட்கையிற் குறைபாடுடையன் எனின், தலைவியிடத்தில் அன்பிலனாம்; என்னை, வேட்கையினாற் பிறந்த அன்பாதலான். அன்றி முன்னின்ற வேட்கையிற் குறைபாடிலனெனின், புணர்ச்சியாற் பயனின்றெனலாம். மற்று என்னையெனின், அன்பும் - இயற்கையன்பு என்றும், செயற்கையன்பு என்றும் இரண்டு வகைப்படும். அவற்றுள் இயற்கையன்பாவது, ஊழ்வினை வயத்தான் ஒருவரிடத்து ஒருவர்க்குப் பற்றிய அன்பு - செயற்கையன்பாவது,
| | 1. தொல். எழுத். தொகை - 18, 7. | | |
| |