| புணர்ச்சிக்கண் தலைவியிடத்துப் பிறந்த குணங்களாற்றோன்றும் அன்பு. ஆதலால், புணர்ச்சிக்கண் குறைந்த வேட்கை இயற்கையன்பினானும், செயற்கையன்பினானும் நிறையு மாதலான், புணராத முன்னின்ற வேட்கையும் அன்பும் புணர்ந்த பின்னும் ஒத்து நிற்குமென்று உணர்க. என்னை,
| | `அதுவே, தானே அவளே தமியர் காணக் காமப் புணர்ச்சி இருவயி னொத்தல்`
| என்னும் இறையனார் அகப்பொருட் சூத்திரத்தில், இருவயினொத்தல ் என்பதற்குப் பொருள், புணராத முன்னும் புணர்ந்த பின்னும் ஆகிய இரண்டிடத்தும் வேட்கையும் அன்பும் ஒத்திருக்குமென்பது அவ்வுரையாற் கண்டுகொள்க.
| (19) | | இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று. | | | |
| |