பக்கம் எண் :

3. வன்புறை
49

 
அஃதாவது,   தலைவி  ஐயுற்றவழி  ஐயுறவு  தீரத் தலைவன் வற்புறுத்திக்  கூறல்,
அஃது,

      என்னும் சூத்திரவிதியால், வன்புறை இரண்டு வகைப்படும்.

அணிந்துழி நாணியதுணர்ந்து தெளிவித்தல்:
அணிந்துழி   நாணியது   உணர்ந்து   தெளிவித்தல்   என்பது  புணர்ச்சியிடத்து,
தலைவியணிந்த   முத்துமாலை   முதலிய   கொங்கையணி  குழலணி  இவைகள்
வேறுபட்டதனைத்   தலைவன்  தன்   கையினால்  வேறுபாடு  தீர  அணிந்துழி,
தலைவி   பாங்கியால்   அணியப்பட்ட   அணி   இவர்கையா   லணியும்போது
வேறுபடும்    என்றும்,   இவ்வேறுபாட்டைப்  பாங்கியறியின்  ஐயம்   பிறக்கும்
என்றும்   நாணினளாகி   முகம்   வேறுபட்டாளாக,   அவ்வேறுபாடு  தலைவன்
அறிந்து தலைவியைத் தெளிவித்தல்.

(இ-ள்.)  மான்மதமும்  கரிய  அகிற் புகையும் தோய்ந்த சூழலை யுடையாய், யான்
அணிந்த  அணியால்  ஐயுற்று நாணியஞ்சலை; வாவிகளும் சோலைகளும்  சூழ்ந்த
தஞ்சைவாணனது தென்மாறை நாட்டு வயலிடத் துண்டாகிய, நீலப்போதும்  கயலும்
கமலப் போதும் ஒப்புக்காட்டும் நினது கண்மலரும் ஆவியும் போன்ற தோழி  மார்
அணிந்த அணியாக அணிந்தனனாதலான் என்றவாறு.

நாவி - மான்மதம்.   தோய்குழல்:   ஆகுபெயர்;   தாழ்குழல்   என்பது   போல
அன்மொழித்தொகை  யாகாதோ எனின், ஆகாது. என்னை,  தாழ்குழல்   என்பது
வினைத்தொகைப்    புறத்துப்   பிறந்த   அன்மொழித்  தொகை.   தோய்குழல்
அவ்வண்ணமாகாது.   மற்றுமொரு  சொல்லை  நோக்கி  நிற்றலான்  ஆகுபெயர்
ஆயிற்று.   காவி - நீலப்போது.  சேல் - கயல்.  இனியார் - ஈண்டுத்தோழிமார்.
(20)    

1. அகப். விளக்கம், களவியல் - 12.