பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
66

 
அவ்வன்னமிருக்கும்  உயிர்  கமலமாகவும்  உருவகஞ்  செய்யப்பட்டன.  `மீண்டு
வந்து` என்பதனால்,  போய் என்ற சொல் வருவிக்கப்பட்டது. இயற்கைப் புணர்ச்சி
புணர்ந்து இடந்தலைப் பாட்டில் வந்தமையால் போய் மீண்டும் வந்தெனக் கூறியது.

அயில் - கூர்மை. விழி - கண். `வாவி` என்புழி ஏழனுருபு தொக்கது.  கயல் -மீன்.
`கயல்போல்விழி` என்னாது, `விழிபோற் கயல்` என்றது.

 `பொருளது புணர்வே புணர்ப்போன் குறிப்பின்
மருளற வரூஉ மரபிற் றென்ப`

என்னும்   உவமவியற்   சூத்திரத்தான்   இன்னது  பொருளென்றும்,    இன்னது
உவமையென்றுங் கூறத்தக்கதில்லை. பொருளும் உவமமும் புணர்க்கும்  புலவனால்
எவ்வாறு   செய்யப்பட்டதோ   அவ்வாறு   இயையுமென்று   கொள்க.  இதனை
இயலுடை  யார்   விபரீத  வுவமையென்ப  உகளுதல் - பிறழ்தல்,  `அலர்த்தேன்
குதிக்க   வாவிக்  கயலுகளும்`  என்று  பாடமோதுவாரும் உளர். வரை -  மலை. உடன்கூவுதல் - எதிர்    கூவுதல்.      குடைதல் - குளித்தல்.     குயிலாயம் :
உவமைத்தொகை. குறுகல் - கூடுதல்.
`தந்ததெய்வந் தருமெனச் சேறல்` ஒன்றும் தெய்வந் தெளிதற்குரித்து;   `காண்டல்`,
`முயங்கல்`,    `புகழ்தல்`,    மூன்றும்    கூடற்குரிய; `ஆயத்துய்த்தல்`  ஒன்றும்
விடுத்தற்குரித்து.

(38)    
இடந்தலைப்பாடு முற்றிற்று.
இரண்டாநாள் இடந்தலைப்பாட்டிற் கூடினாரென் றுணர்க.