|
|
புகழ்தல்; |
புகழ்தல் என்பது, தலைவன் தலைவியைப் புகழ்ந்து கூறல். |
| அரும்பாம் அளவில் தனத்தொடொவ் வாயல ராமளவில் கரும்பா மொழிவத னத்தொடொவ் வாய்களி யானைசெம்பொன் தரும்1பாரி வாணன் தமிழ்த்தஞ்சை யான்தரி யாரின்முன்செய் பெரும்பாவ மல்லது நீர்நின்ற பேறல்லி பெற்றிலையே.
|
(இ-ள்.) அகவிதழையுடைய தாமரையே, நீ அரும்பாகுங் காலம் கரும்பையொத்த மொழியையுடையாளது தனத்துக் கொப்பாகாய்; அலராகுங் காலத்து முகத்தோடொப்பாகாய்; களித்த யானையும் செம்பொன்னும் நாவலர்க்குத் தரும் பாரியென்னும் வள்ளலுக்கொப்பான தமிழ்த்தஞ்சை நகரையுடைய வாணனுக்குப் பகைவரைப் போல முன்செய்த பெரும் பாவமல்லது, நீரிலே தவப்பேறு பெற்றிலையாயினை என்றவாறு.
|
எனவே, தலைவியைப் புகழ்ந்தவாறாயிற்று. தனம் - முலை. வதனம் - முகம். பாரி - ஓர் வள்ளல். தரியார் - பகைவர். அல்லி: அண்மை விளி: ஆகுபெயர்.
|
(37) |
ஆயத்துய்த்தல்: |
ஆயத்துய்த்தல் என்பது, ஆயக்கூட்டத்துத் தலைவியைச் செலுத்தல்.
|
| மேவிக் கலைக்கட லென்புலன் மீனுண்டு மீண்டுவந்தென் ஆவிக் கமலத் தமரன்ன மேநின் அயில்விழிபோல் வாவிக் கயலுக ளுந்தஞ்சை வாணன் வரையினுடன் கூவிக் கயங்குடை நின்குயி லாயங் குறுகுகவே.
|
(இ-ள்.) கலையாகிய கடலில்மேவி, என்னறிவாகிய மீனையுண்டு போய் மீண்டுவந்து, என்னுயிராகிய கமலத்திற்குடியாக அமர்ந்திருக்கும் அன்னமே! நின்னுடைய கூரிய கண்போல வாவியிற் கயல்கள் புரளுந் தஞ்சைவாணன் மலையில் எதிர் கூவிக் கயத்துட் குளித்து விளையாடும் நின்னுடைய குயிற்கூட்டம் போன்ற ஆயக்கூட்டத்திற் கூடுக என்றவாறு.
|
`கலைக்கடல் மேவி` என மாறுக. புலன் - அறிவு. கலை கடலாகவும், புலன் மீனாகவும், அதனை யுண்ணுந் தலைவி அன்ன
|
|
1. பாரி இன்னார் என்பதனைச் சிறுபாணாற்றுப் படையுள் `சுரும்புண - நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச், சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய, பிறங்குவெள் அருவி வீழுஞ்சாரற், பறம்பிற் கோமான் பாரியும்` என்றதனானும் அதற்கு நச்சினார்க்கினியர் கூறிய உரையானும் உணர்க.
|
|
|