|
|
இடையாராகிய ஆயக்கூட்டத்துடன் நீ போய்ப் பொருந்துக, என மாலை சூட்டித் தலைவியை விடுத்தான் என்றவாறு.
|
இளங்கொடி: ஆகுபெயர். `குழாந் தன்னூடேய்ந்து செல்லும்` என மாறுக. இப்பி ஆயிரம் சூழ்ந்தது இடம்புரி; இடம்புரி ஆயிரஞ்சூழ்ந்தது வலம்புரி, வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சலஞ்சலம். புகழ்மணி - மாணிக்கம். சலஞ்சலம் சங்குகளிற் சிறத்தலானும், மாணிக்கம் மணிகளிற் சிறத்தலானும் உவமை கூறியதென்று உணர்க. புடை - பக்கம். ஊடல் - பிணக்கம். மேவுதல் - பொருந்தல்.
|
இக்கிளவியில் மாலைசூட்டித் தலைவியை விடுத்தானென்பது; ஆயின் இச்செய்யுளில் முல்லைமாலை சூட்டி விடுத்தானென்பது இல்லையாலெனின், தலைவி ஆயக்கூட்டத்திற் சார்ந்தவுடன் தலைவியை நோக்கி, `நினக்கு முல்லைமாலை சுனைப்புனம் சூட்டியவாறு நன்றால்` என்று பாங்கி கூறியவதனான் இங்ஙனங் கூறப்பட்டது. வரைவியலில் தலைவனைப் பாங்கி வாழ்த்தற் செய்யுளில்,
|
| 1`சங்கதி ரக்காட்டு நீயன்று சூட்டலரே` |
என்றதனாலும் அறிக. |
இவற்றுள் முன்னைய மூன்றும் சார்தல், கேட்டல், சாற்றல் என்னும் மூன்றற்குரிய; `பாங்கன் கழறல்` முதல் `கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்` ஈறாகக் கூறிய நான்கும் எதிர்மறைக்குரிய; `பாங்கன் தன் மனத்தழுங்கல்` முதல், `தலைவன் தனக்குத் தலைவி நிலைகூறல்` முதல், `புகழ்தல்` ஈறாகக் கூறிய நான்கும் கூடற்குரிய; தலைவன் தலைவியைப் பாங்கியொடு வருகெனப் பகர்த`லும் `தலைவன் தலைவியைப் பாங்கிற்கூட்ட`லும் ஆகிய இரண்டும் பாங்கிற்கூட்டற்கரிய எனக்கொள்க. |
(62) |
பாங்கற்கூட்டம் முற்றிற்று. |
|
1. தஞ்சைவாணன் கோவை - 285. |