|
|
தோற்றத்தாலாராய்தல்: |
திளைத்தல் - நிறைதல். திரை: ஆகுபெயர். செம்பொன் வெற்பு - மேருமலை. பிரான் - சிவன். முடி - சடைமுடி. வைகுதல் - தங்குதல். செக்கர்விண் - செவ்வானம். கார் - கருநிறம் : மேகமெனினும் அமையும். தளைத்தல் - தடைசெய்தல்.
|
திரு இவ்வுருக்கொண்டு வந்து பிறந்தாள் என்னும் கருத்தால் `திருவே` என்று கூறியது. இவள் கற்புக்கடன் பூண்டவளாதலான்,
|
| 1`தெய்வந் தொழஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை`
|
என்னும் விதியினான் தொழளாயினாள்; ஆகவே ஒழுக்கத்தினால் ஐயந்திருந்தவாறாயிற்று.
|
இப்பால் பாங்கி தலைவியை நோக்கிக், `கண்சிவந்தும் இதழ்வெளுத்தும் நுதல் குறுவெயர் வரும்பியும் இருத்தலால், இவ்வேறுபாடு நினக்கெற்றறினாலாயது?` என்று வினாவுதலும், தலைவி `சுனையாடிப் போந்தேன், அதனால் வந்தது` என்று விடுத்தலும் இச்செய்யுளில் கவி கூறிற்றிலர்; யாதினாலெனின், அகப்பொருட் சூத்திரத்தில் இவ்விரண்டிற்குங் கிளவி கூறிற்றிலராதலானென்க. அவர் கிளவி கூறாததற்குக் காரணம் என்னை யெனின், சுருக்க நூலாதலிற் கூறிற்றிலர். விரிநூலிற் கூறியதுண்டோவெனின், கூறியதுண்டு, என்னை, தொல்காப்பியத்தில் 2`நாற்றமுந் தோற்றமும்` என்னுஞ் சூத்திரத்தில் நச்சினார்க்கினியருரையில் தலைவி வேறுபாடு பாங்கி வினாயதற்குச் செய்யுள்,
|
| `தொய்யில் வனமுலையுந் தோளுங் கவினெய்தித் தெய்வங் கமழுமால் ஐம்பாலு - மையுறுவல் பொன்னங் கொடிமருங்குற் பூங்கயற் கண்ணினாய்க் கென்னை யிதுவந்த வாறு.`
|
இதற்கு விடை: நின்னை நீங்கி மேதக்க சுனை கண்டு நெடுங்காலம் ஆடினேன், அதனான் ஆயிற்று என்னும். |
(64) |
அதற்குப் பாங்கி மெய்யினாற் பல்வேறு கவர்பொருள் சொல்லி நாடலின் சுனை நயப் புரைத்தல்: |
சுனை நயப்பு உரைத்தல் என்பது, மெய்யாயினது கூறி அக்கூறும் பொருளிற் பல்வேறு கவர்பொருள் சொல்லி ஆராய்தலின் சுனைநன்மையைக் கூறல்.
|
|
1. குறள். வாழ்க்கைத்துணைநலம் - 5. |
2. தொல். பொருள். களவியல் - 23. |