பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
86

 
தோற்றத்தாலாராய்தல்:

வண்டலை அயத் துடனயர்ந் தோவன்றி வண்டிமிர்பூந்
தண்டலை ஆரத் தழைகள்கொய் தோதஞ்சை வாணன்வெற்பில்
புண்டலை வேலினுங் கண்சிவப் பாரப் பொலஞ்சுனைத்தேன்
கொண்டலை நீர்குடைந் தோவிவண் மேனி குழைந்ததுவே.

      (இ-ள்.) நெஞ்சமே!   இவள்  மேனி குழைவுபட்டது, ஆயக் கூட்டத்துடன்
வண்டலம்  பாவையை   வருந்திச்  செய்தோ!  அன்றி,  வண்டு   ஆரவாரிக்கும்
பூஞ்சோலையிடத்துச்   சந்தனத்   தழைகள் கொய்தோ! அன்றித் தஞ்சைவாணனது
வெற்பிடத்துப்  புண்செய்யும்  தலையையுடைய வேலினும் கண்சிவப்புப் பொருந்தப்
பொன்     விளையப்பட்ட    சுனையினிடத்து   மலைத்தேன்   வந்து    கூடக்
கொண்டலையப்பட்ட நீருட் குளித்தோ! யாதோ! அறிகின்றிலேன் என்றவாறு.

வண்டல் - வண்டலம்பாவை. அயர்தல் - செய்தல். அன்றி: வினையெச்சக் குறிப்பு.
இமிர்தல் - ஆரவாரித்தல்.   தண்டலை - சோலை.  ஆரத்தழை - சந்தனத்தழை.
பொலம் - பொன்.       குடைதல் - குளித்தல்.         குழைதல் - இளகுதல்.
ஓகாரங்களனைத்தும் ஐயத்தின்கண் வந்தன. நெஞ்சம் : முன்னிலையெச்சம்.

  1`அவ்வகை தன்னால் ஐயந் தீர்தல்`
      அவ்வேழு   வகையினாலும்  வுணர்ச்சியுடென்று  கருதித் தலைவியிடத்து
ஐயந் தீர்தல்.
(63)    
குறையுற  உணர்தலாவது - பாங்கி  தலைவன்  தழையுங்  கண்ணியுங்  கொண்டு
தன்பாற் குறையுற்று நிற்பக்கண்டு அதனானே கூட்டமுண்மை யறிதல்.

ஒழுக்கத்தாலையந் தீர்தல்:

திளைக்குந் திரைமே லுனக்குமுன் தோன்றலிற்செம்பொன்வெ்பை
வளைக்கும் பிரான்முடி வைகுத லாற்றஞ்சை வாணன்மண்மேல்
விளைக்கும் புகழ்போல் விளங்குத லாற்செக்கர் விண்பிறைகார்
தளைக்குங் குழற்றிரு வேதொழ வேதகுந் தன்மையதே.

      (இ-ள்.)   காரைத்   தன்னிடத்து   நின்று   நீங்காமல்   தளைசெய்யுங்
குழலையுடைய  திருவே! நிரம்புங் கடலினிடத்து நினக்கு முன்னே தோன்றலானும்,
செம்பொன்   மலையை வில்லாக வளைக்கும் சிவனது திருமுடீயிடத்திருத்தலானும்,
தஞ்சைவாணன் புவியின்மேல் விளையச் செய்யும் புகழ்போல நாட்கு நாள் மிக்காய்
விளங்குதலானும்,    செவ்வானத்திடைத்    தோன்றிய    பிறை    திங்கடோறுந்
தொழுதல்போல் இன்றுந் தொழத்தகுந் தன்மைய தாதலான், நீ தொழுவாயாக
என்றவாறு.


1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 23.