பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
92

 

1`அளவி லின்பத் தைந்திணை மருங்கிற்
களவுகற் பெனவிரு கைகோள் வழங்கும்`

      என்னும்   அகப்பொருளினும், 2`அன்பிணைந்திணைக் களவெனப் படுவது`
என்னும் இறையனார் அகப்பொருளினும்,

 3`இன்பமும் பொருளும் அறனு மென்றாங்
கன்பொடு புணர்ந்த வைந்திணைமருங்கிற் காமக்கூட்டம்`


      என்பதனான் தொல்காப்பியத்தினும், மற்றும் பிற நூல்களினும்  4ஐந்திணை
களவென்று   கூறுவதல்லது   பொருந்திணையை   அகப்பொருளிற் கூறுவது ஒரு
நூலினுமில்லை.

பெருந்திணையாவது,

 ஒப்பில் கூட்டமு மூத்தோர் முயக்கமும்
செப்பிய வகப்பொருட் சிதைவும் பெருந்திணை`

என்னும் சூத்திர விதியாற் பெருந்திணைப்பாற்படும் என்றல் பொருந்தாது.அகத்திற்
சிதைந்தது புறத்தின் பாற்படும்.

  5`மடலே றுதலொடு விடைதழா லென்றா
குற்றிசை தன்னொடு குறுங்கலி யென்றா
சுரநடை தன்னொடு முதுபாலை யென்றா
தாபத நிலையொடு தபுதார நிலையெனப்
புகன்றவை 6யியற்பெயர் பொருந்தா வாயின்
அகன்ற வகப்புறப்7பெருந்திணைத் தாகும்`

என்பதனால்   நாணநாட்டம்  நடுங்கநாட்டம் இதனோடு ஒப்பதன்றீ வழுவமைதிs
யென்று உணர்க.

இவற்றுள்   முன்னைய இரண்டும் மெய்யினாற் சொல்லியது பின்னைய  இரண்டும்
பொய்யினாற் சொல்லியது.
(68)    
இத்துணையும் மூன்றாநாட் செய்தியென வுணர்க.

முன்னுறவுணர்தல் முற்றிற்று.

1. அகப்பொருள் விளக்கம், அகத்திணையியல் - 26.
2. இறையனார் அகப்பொருள் - 1.
3. தொல். பொருள் களவியல் - 1.
(பாடம்.) 4. ஐந்திணைக் களவென்று.
5. அகப்பொருள் விளக்கம், ஒழிபியல் - 35.
(பாடம்.) 6. இறைவற் பொருந்தாவாதலின்.
" 7. பெருந்திணைக்காகும்.