பக்கம் எண் :

பாங்கி மதியுடன்பாடு
91

 
      வஞ்சி: ஆகுபெயர்.         மால் - விண்டு.       புரத்தல் - காத்தல்.
கோடிய -வழுவிய. கோடு - கொம்பு.


`நாணவு நடுங்கவு நாடாள் தோழி
காணுங் காலைத் தலைமகள் தேத்து`

      என்பதனால், நாணநாட்டமும்,  நடுங்க நாட்டமும் கூறியது  அகப்பொருட்
சிதைவாய்ப்  பெருந்திணைப்பாற்படும்.   அன்றியும்  பாங்கி  இவ்வாறு   கூறவே,
தலைவி  குறிப்பறியாது  கூறினாளுமாம்,  அவமதித்தாளுமாம்,    ஆசாரமில்லாது   கூறினாளுமாம்; மற்று   இக்குற்றமெல்லாம்   நீங்குமாறும்,   அகப்பொருட்சிதைவு
வாராமற்  போற்றுமாறும், என்னையெனின்  நாணநாட்டத்தின்   கண், தலைவிக்கு உயிர்ப்பாங்கி  யாதலின்,  இவளுள்ளமே  அவளுள்ளமாதலின்,  புணர்ச்சியுண்மை
யுண்டு  என்பது  அறிந்து கூறுகின்றாளென்பது  தலைவியறியும். அறிந்த  தலைவி
பாங்கியுடன்  கூறாதது  என்னையெனின்,  இவள்  பெருநாணினளாதலான்   கூற   லாகாதென்றிருந்தாள்.    தன்னுடன்   உண்மை   கூறவில்லை.   தானுண்மைக்கு
அயலாயினேன்,   அவ்வாறு   அயலாகாது   உடம்பட்டிருக்கத்     தலைவியாகத்
தன்னோடு கூறவேண்டுமென்பது கருதி, பாங்கி ஆராய்ச்சி செய்த காரியமாதலான்,
நாணநாட்டத்தாற் குற்றமின்மை யறிக.

      இனி   நடுங்கநாட்டம், யானையைக் கண்டஞ்சினேன் என்ற வழி தலைவி
நடுங்காமலிருந்தவழி என்னையெனின்,

 1`மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர் பொருள் நாட்டத் தானும்`


      என்னும்      சூத்திரத்தில்,      `வழிநிலை பிழையாது`     என்பதற்கு
நச்சினார்க்கினியர்   உரையில்,   `பாங்கி   குற்றேவல்    முறைமை    தப்பாது
பெருநாணினள்,  பேரச்சத்தால்  தலைவியென்பதறிந்து,   தானும்   இறந்துபடாமற் கூறத்தகும் வார்த்தை கூறும்` என்று உரை கூறினாராத லானென்பது.  நடுங்கநாடிக் கூறும்போது   பாங்கி,    எம்பெருமாட்டி    கவற்சியுறும்,    கவற்சியுற்றபோதே
யிறந்துபடினும்  படும்  என்பதறிந்து  முகமலர்ச்சியால்  நகையாடுதல்  போன்றுங் கூறுமாதலால்,  தலைவி  இவள்   முகக்குறிப்பு   நோக்கியும்,   கவற்சியில்லாமை
நோக்கியும் பொய்யென்றறிந்திருந்தாளென்க. அன்றியும், சான்றோர் செய்யுட் களிற் பெரும்பாலும்  பயின்று  வருதலானும்   குற்றமின்றென   உணர்க.   குற்றமாயின்
சான்றோர் செய்யுட்கண் ஓதார் என வுணர்க.

தொல்காப்பியச்   சூத்திரத்தும், 1`வழிநிலை பிழையாது` என்பதனால்  வழுவமைதி
பெற்றாம்.      திருக்கோவையாரில்      நாணநாட்டம்,     நடுங்கநாட்டத்தைப் பெருந்திணைப்பாற்படும்     என்று    பேராசிரியர்    உரை   கூறினாரெனின்,
`மாறுகொளக் கூறல்` என்னும் குற்றமாம் என்னை


1. தொல், பொருள். களவியல் - 23.