28 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
நராதி-அளகாபுரி மன்னனாகிய குபேரன். ஈரொன்பதின்மர்-பதினெட்டுச் சிவகணத்தர்.
சுடரும் - இரு சுடரும் - ஒளிதருகின்ற சூரிய சந்திரர் இருவரும். பரவிய - துதிக்கப்படும் அல்லது
துதித்த. தோகையர் எழுவர் - கன்னியர் எழுவர். பரிதி - சூரியன். பகிர் அண்டம் - வெளியுலகம்.
பழுமரம் - ஆலமரம். பாழி - பருத்த. புகர்- புள்ளி. தந்தி - யானை, இங்கு யானை முகக் கடவுள்.
சந்தம் - சந்தனம்; அழகு.
(21)
கங்குல் பொருந்திய குவளைக் குழியில்
கழியில் பழனத்தில்
கரையிற் கரைபொரு திரையில் வளைந்த
கவைக்கால் வரி அலவன்
பொங்கு குறுந்தளி வாடையின் நொந்து
பொறாதே வெயில்காயும்
புளினத் திடரில் கவரில் துரவில்
புன்னை நறுந்தாதில்
கொங்கு விரிந்த மடற்பொதி தாழைக்
குறுமுட் கரியபசுங்
கோலச் சிறிய குடக்கா யில்புயல்
கொழுதுஞ் செய்குன்றிற்
சங்கு முழங்கிய செந்திற் பதியாய்
தாலோ தாலேலோ
சமய விரோதிகள் திமிர திவாகர
தாலோ தாலேலோ.
(அ-ரை) கங்குல்-இரவு. பழனம் -
வயல், கரை பொரு திரை - கரையை மோதுகின்ற அலை. அலவன் - நண்டு. காயும் -
|