பக்கம் எண் :

பு

தாலப் பருவம்

27

புதுமை. செறு-வயல். மண்டூகம்-தவளை, பானல் - நீலோற் பல மலர். செருமி - இருமி. புடையில் - குழியில். தமரம் - பேரொலி. விட்புலம் - ஆகாயத்திடம். மகபதி - இந்திரன்; நூறு மகங்கள் செய்து தேவர் தலைவன் ஆனவன். 

(20)

----- 

3.தாலப் பருவம் 

அடரும் பருநவ மணிமுடி அமரரும்
அமரர்க் கிறைவனுநீ
டளகைந ராதியும் ஈரொன் பதின்மரும்
அருமறை முனிவோருஞ்

சுடருந் தருமிரு சுடரும் பரவிய
தோகைய ரெழுவருமுத்
தொழின்முக் கடவுளும் அவரவர் தங்குறை
சொல்லித் துதிசெய்தார்

படருங் கிரணப் பரிதி நெடுங்கதிர்
பாயும் பகிரண்டம்
பழுமரம் என்னப் பனையென நிமிரும்
பாழிக் கைந்நீட்டித்

தடவும் புகர்முக தந்திக் கிளையாய்
தாலோ தாலேலோ
சந்த மணங்கமழ் செந்திற் பதியாய்
தாலோ தாலேலோ.

(அ-ரை) அடரும் - நெருங்கும். அமரர் - தேவர். மரணமில்லாதவர். அமரர்க்கு இறைவன் - இந்திரன். அளகை