26 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
முனிவர்வி ரும்பு கற்புடைப் பான்மை
மகளிர்கள் மொண்டெ டுத்தகைச் சாலின்-மடுவில்
முழுது மேதியில் வம்பே செஞ்சேல்பாய்
செறுவில்வி ளைந்த நெற்குலைக் காயில்
உழவிலு டைந்த கட்டியிற் பார-மதகு
செறியும் ஏரியின் மண்டு கம்பானல்
செருமிமு ழங்கு கற்பிளப் பான
புடையின்வி ழும்பு னற்பெருக் கான-தமர
திமிர வாவியி லெங்கே யுந்தாவுந்
திரையில் வலம்பு ரிக்கணத் தோடு
பணிலமு ழங்கு பட்டினக் காவல்-திகிரி
முருக வேலவ செங்கோ செங்கீரை
தினகரர் அஞ்ச விட்புலத் தேவர்
மகபதி முன்கு வித்த வித்தார-மவுலி
திறைகொள் சேவக செங்கோ செங்கீரை
(அ-ரை) விண்ட. விரிந்த,
குணலை-ஒரு கூத்து, வீராவேசக் கொக்கரிப்பு, குடில்-குடிசை. வற்றாத-சுருங்காத, வண்டல்-நீர்ச்சுழி.
வண்டானம்-நாரை. குரவு-குராமரம். நகிலர்-கொங்கையையுடைய சிறு பெண்கள். தெற்றி - திண்ணை,
இடறு-தட்டு; எற்று. ஆரம்-முத்து, பூண்-நகை. ஞெண்டு-நண்டு. முக்குளித்து-அமிழ்ந்தி, அளறு-சேறு, வித்தாரம்-அகலம்.
துரவு-தோட்டம். முறுக-மிக. ஆலை-கரும்பு ஆட்டும் இயந்திரம். விளம்பி-கள். கடைசி-மருதநிலப் பெண்.
சாலி-நெற்பயிர். முருகு-தேன், பித்திகைப் பீடம்-சுவர்த் தலங்களையுடைய ஆசனம். மறுகு-தெரு. முதல்வர்-மும்மூர்த்திகள்.
பான்மை-தன்மை. கைக்கால் - சிறிய காலவாய். மடு - தடாகம். மேதி - எருமை. வம்பு -
|