30 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
பாம்பால் உததி தனைக்கடைந்து
படருங் கொடுங்கார் சொரிமழைக்குப்
பரிய வரையைக் குடைகவித்துப்
பசுக்கள் வெருவிப் பதறாமற்
காம்பால் இசையின் தொனியழைத்துக்
கதறுந் தமரக் காளிந்திக்
கரையில் நிரைப்பின் னேநடந்த
கண்ணன் மருகா முகையுடைக்கும்
பூம்பா சடைப்பங் கயத்தடத்திற்
புனிற்றுக்கவரி முலைநெரித்துப்
பொழியும் அமுதந் தனைக்கண்டு
புனலைப் பிரித்துப் பேட்டெகினந்
தீம்பால் பருகுந் திருச்செந்தூர்ச்
செல்வா தாலோ தாலேலோ
தெய்வக் களிற்றை மணம் புணர்ந்த
சிறுவா தாலோ தாலேலோ.
(அ-ரை) உததி - கடல்.
படரும்-விரியும். பரியவரை-பெரிய கோவர்த்தன மலை. பதறாமல் - நடுங்காமல். காம்பால் மூங்கிற்குழலால்.
காளிந்தி-யமுனையாறு. நிரை-பசுக்கூட்டம். அடை - இலை. புனிற்றுக்கவரி-இளமையுடைய எருமைகள். நெரித்து-கட்டுவிட்டு.
பேட்டு எகினம். பெட்டையன்னம் தீம்பால்பருகும் - இனியாபாலைக்குடிக்கும். தெய்வக்களிறு-தெய்வயானையம்மை.
(24)
வேறு
மங்கல மங்கல நூல் எங்குமொ ழிந்தனர்காண்
வானோர் ஏனோர்போய்
|